search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விமானத்தில் வந்து இறங்கிய தடுப்பூசி மருந்து
    X
    விமானத்தில் வந்து இறங்கிய தடுப்பூசி மருந்து

    ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் இரண்டாவது தொகுப்பு இந்தியா வந்தது

    ஒரு டோஸ் மட்டுமே செலுத்தக்கூடிய இந்தியா-ஸ்புட்னிக் லைட் தடுப்பூசியை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டிருப்பதாக இந்தியாவுக்கான ரஷிய தூதர் கூறினார்.
    ஐதராபாத்:

    இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய கொரோனா தடுப்பூசிகளுடன் ரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியும் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. 

    இந்தியாவின் அவசர தேவை கருதி உடனடியாக தடுப்பூசி மருந்தை வழங்குவதாக ரஷியா கூறியிருந்தது. அதன்படி முதற்கட்டமாக 1.5 லட்சம் டோஸ் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி மருந்துகள் கடந்த 1ம் தேதி ஐதராபாத் வந்தத. இந்நிலையில், இரண்டாம் தொகுப்பு ஸ்புட்னிக்-வி தடுப்பூசி இன்று ஐதராபாத் வந்தடைந்தது.

    ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை இந்தியாவில் சப்ளை செய்வதற்கும், தயாரிப்பதற்கும் ஐதராபாத்தைச் சேர்ந்த டாக்டர் ரெட்டிஸ் ஆய்வகம் ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி நேற்று முன்தினம் மருந்தை விற்பனைக்கு அறிமுகம் செய்து விலையையும் நிர்ணயித்தது. அதே நாளில் தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தும் பணியையும் தொடங்கியது. 

    ஸ்புட்னிக்-வி தடுப்பூசி மருந்து

    இதுபற்றி இந்தியாவுக்கான ரஷிய தூதர் குடாஷேவ் கூறுகையில், ஸ்புட்னிக்-வி தடுப்பூசியானது ரஷிய-இந்திய தடுப்பூசி என்றும், இந்தியாவில் இந்த தடுப்பூசி உற்பத்தி படிப்படியாக அதிகரித்து, ஆண்டுக்கு 850 மில்லியன் டோஸ் வரை அதிகரிக்கும் என்றும் கூறினார். 

    ஒரு டோஸ் மட்டுமே செலுத்தக்கூடிய இந்தியா-ஸ்புட்னிக் லைட் தடுப்பூசியை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
    Next Story
    ×