search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆதார் அட்டை
    X
    ஆதார் அட்டை

    கொரோனா தடுப்பூசி போட ஆதார் கட்டாயம் இல்லை- ஆதார் ஆணையம் அறிக்கை

    தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பொதுமக்களுக்கான சேவைகளில் வெளிப்படைத்தன்மையையும், நம்பகத்தன்மையையும் ஏற்படுத்துவதற்காக ஆதார் எண் அறிமுகப்படுத்தப்பட்டது.

    புதுடெல்லி:

    கொரோனா தடுப்பூசி போடுவதற்கு ஆதார் அடையாள அட்டை கட்டாயம் என்று கூறுகிறார்கள். ஆதார் அட்டை இல்லாவிட்டால் தடுப்பூசி போட மறுக்கப்படுகிறது.

    இந்த நிலையில் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பொதுமக்களுக்கான சேவைகளில் வெளிப்படைத்தன்மையையும், நம்பகத்தன்மையையும் ஏற்படுத்துவதற்காக ஆதார் எண் அறிமுகப்படுத்தப்பட்டது.

    ஆதார் இல்லாதபோது மாற்று வழிகள் மூலம் பொதுமக்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் வழிமுறைகள் தொடர்பாக ஏற்கனவே விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    ஆதார் சட்டத்தின்படி ஆதார் இல்லை என்பதற்காக பொதுமக்களின் எந்தவொரு அத்தியாவசிய சேவையும் மறுக்கப்பட கூடாது.

    கோப்புப்படம்

    எனவே ஆதார் எண் இல்லை என்பதற்காக எந்த ஒரு நபருக்கும் கொரோனா தடுப்பூசி, மருந்து, மருத்துவமனையில் அனுமதி மற்றும் சிகிச்சையை மறுக்கக்கூடாது.

    ஒருவரிடம் ஆதார் எண் இல்லாவிட்டாலும் அல்லது அந்த நபரின் ஆதார் எண்ணை இணைய வழியில் உறுதிப்படுத்த முடியாவிட்டாலும் இணைய வழியில் உறுதிப்படுத்த முடியாமல் போனாலும் ஆதார் சட்டம் 2016-ன்படி சம்பந்தப்பட்ட அமைப்பு அல்லது துறை அந்த நபருக்கான சேவையை கட்டாயம் வழங்க வேண்டும்.

    சேவை மறுக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட துறைகளின் உயர்அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×