search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராகுல் காந்தி
    X
    ராகுல் காந்தி

    மத்திய அரசின்‘தவறான தடுப்பூசி கொள்கை 3-வது அலையை ஏற்படுத்தும்’ - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

    இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை வீரியமாக தாக்கி வரும் நிலையில், நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகளை மத்திய-மாநில அரசுகள் துரிதப்படுத்தி வருகின்றன.
    புதுடெல்லி:

    மத்திய அரசின் தவறான தடுப்பூசி கொள்கை 3-வது அலையை ஏற்படுத்தும் எனவும், சரியான தடுப்பூசி கொள்கையே இந்தியாவுக்கு தேவை எனவும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

    இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை வீரியமாக தாக்கி வரும் நிலையில், நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகளை மத்திய-மாநில அரசுகள் துரிதப்படுத்தி வருகின்றன.

    ஆனால் பல மாநிலங்களில் தடுப்பூசிக்கு பலத்த தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக பல மாநிலங்கள் 3-ம் கட்ட தடுப்பூசி பணிகளை தொடங்க முடியாத சூழலில் உள்ளன.

    கொரோனா வைரஸ்


    இந்த நிலையில் மத்திய அரசின் தடுப்பூசி கொள்கையை ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார்.

    இது குறித்து அவர் தனது டுவிட்டர் தளத்தில் ‘மத்திய அரசின் பேரழிவு தரும் தடுப்பூசி கொள்கை நாட்டில் 3-வது அலையை உறுதி செய்யும். அது ஏற்படக்கூடாது. ஒரு சரியான தடுப்பூசி கொள்கையே இந்தியாவுக்கு தேவை’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

    மத்திய அரசின் தடுப்பூசி கொள்கையை ராகுல் காந்தியும், காங்கிரஸ் கட்சியும் தொடக்கம் முதலே விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    இதைப்போல கங்கை நதியில் மனித உடல்கள் மிதக்கும் விவகாரத்திலும் பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர், ‘கங்கா என அடிக்கடி அழைக்கும் ஒருவர், அன்னை கங்கையை அழவைத்து விட்டார்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

    கங்கை நதியின் 1,140 கி.மீ. நீள தொலைவில் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தியையும் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பதிவுடன் இணைத்திருந்தார்.

    மற்றொரு பதிவில், டக்-தே புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு காங்கிரஸ் தொண்டர்களையும் அவர் கேட்டுக்கொண்டிருந்தார்.
    Next Story
    ×