search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவனந்தபுரம் ஆற்றுகால் பகுதியில் சாலையில் வெள்ளம் தேங்கி உள்ளதை காணலாம்
    X
    திருவனந்தபுரம் ஆற்றுகால் பகுதியில் சாலையில் வெள்ளம் தேங்கி உள்ளதை காணலாம்

    கேரளாவில் பலத்த மழை- 3 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’

    தொடர் மழையால் ஆழப்புழா மாவட்டத்தில் உள்ள குட்டநாடு, நெடுமுடி, செம்மக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
    திருவனந்தபுரம்:

    தென்மேற்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி “தாக்டே” புயல் உருவாகி உள்ளது.

    இதனால் கேரளாவில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் இடை விடாமல் பலத்த மழை பெய்து வருகிறது. திருவனந்தபுரம், ஆழப்புழா உள்பட பல மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    இந்த தொடர் மழையால் ஆழப்புழா மாவட்டத்தில் உள்ள குட்டநாடு, நெடுமுடி, செம்மக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    மழை

    இந்த நிலையில் வானிலை ஆய்வு மையம் இன்று (14-ந் தேதி) திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்றும், ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுவாக 24 மணி நேரத்தில் 204 மில்லி மீட்டர் மழை பெய்யும் நிலையில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்படுள்ளது.

    இதேபோல் நாளையும் (15-ந் தேதி) மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    தாக்டே புயல் எச்சரிக்கை காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இதேபோல் ஆற்றோரம் மற்றும் பிற நீர்நிலைகளில் மீன் பிடிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    கேரள மாநிலத்தில் பலத்த மழை பெய்து வருவதால் தேசிய பேரிடர் மீட்பு படையினர் 9 மாவட்டங்களில் உஷார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர். பொதுமக்கள் வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை பின்பற்றி ஒத்துழைக்குமாறு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கேட்டுக்கொண்டுள்ளார்.


    Next Story
    ×