search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பினராயி விஜயன்
    X
    பினராயி விஜயன்

    ரெயில் பயணிகளுக்கு கொரோனா சான்று கட்டாயம்- பினராயி விஜயன் தகவல்

    கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்தவே ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. முழு ஊரடங்கால் நோய் பரவல் குறைய வாய்ப்புள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

    மாநிலம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 43, 529 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. 95 பேர் பலியாகி உள்ளனர். இதில் எர்ணாகுளம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 6410 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. இருந்தும் நோய் பரவலின் வேகம் இன்னும் முழுமையாக குறையவில்லை. எனவே ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது.

    கொரோனா வைரஸ்

    இதுகுறித்து முதல் மந்திரி பினராயி விஜயன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்தவே ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. முழு ஊரடங்கால் நோய் பரவல் குறைய வாய்ப்புள்ளது. ஆனால் உடனடியாக குறையாது.

    கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பதை போலவே கொரோனாவால் பலியாவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

    கேரளாவுக்கு வெளி மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமானோர் ரெயில் மூலம் வருகிறார்கள். இவ்வாறு வருவோர் 72 மணி நேரத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட கொரோனா இல்லை என்ற ஆர்.டி.பி.சி.ஆர். சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.

    கேரளாவில் பொதுமக்கள் அரசு அறிவித்த கட்டுப்பாடுகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். அப்போதுதான் கொரோனா பரவல் கட்டுக்குள் வரும். அதற்கு அனைவரும் அரசுடன் ஒத்துழைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×