search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாணம் குளியல், அகிலேஷ் யாதவ்
    X
    சாணம் குளியல், அகிலேஷ் யாதவ்

    நாம் அழுவதா, சிரிப்பதா?: மாட்டுச் சாணம் குளியல் வீடியோவை பகிர்ந்து அகிலேஷ் யாதவ் கருத்து

    மாட்டுச் சாணத்தை உடலில் பூசிக்கொண்டு யோகாசனம் செய்தால், கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்ற வீடியை பகிர்ந்து அகிலேஷ் யாதவ் கருத்து தெரிவித்துள்ளார்.
    இந்தியாவில் கொரோனா பாதிப்பின் தீவிரம் அதிகரித்துள்ள நிலையில், குஜராத்தில் உள்ள ஸ்ரீசுவாமி நாராயாணா குருகுல் விஸ்வித்யா பிரதிஷ்டான் சார்பில் நடத்தப்படும் கோ-சாலையில், கொரோனா தாக்காமல் இருக்க மாட்டுச் சாணம் சிகிச்சை அளிக்கப்பட்டது சர்ச்சசையை ஏற்படுத்தி இருக்கிறது.

    இங்கு வரும் பலரும் மாட்டுச் சாணத்தை உடலில் பூசிக்கொண்டு, யோகா செய்தபின் மாட்டுப்பால் மற்றும் மோர் ஆகியவற்றால் உடலை சுத்தம் செய்து மாட்டுச் சாணம் குளியல் எடுத்து வருகின்றனர். இப்படிச் செய்தால் கொரோனா தாக்காது என்று அவர்கள் கூறி வருகின்றனர்.

    இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் செய்திகளில் வெளியாக, "இந்த மாதிரியான சிகிச்சையால் எந்தப் பயனும் இல்லை. உடலின் கழிவுதான் மாட்டுச் சாணம். அதை உடலில் பூசிக்கொள்வதால் எந்த எதிர்ப்பு சக்தியும் ஏற்பட போவதில்லை" என்று சுகாதாரத்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

    ஆனால் ``மருத்துவர்கள் கூட இங்கு வருகிறார்கள். இந்த சிகிச்சையானது அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது என்பதே அவர்களின் நம்பிக்கை" என்று கூறி, தொடர்ந்து அங்கு இதுபோன்ற மாட்டுச் சாணக் குளியல் சிகிச்சை நடத்தி வருகிறார்கள்.

    இதேபோல் சமீபத்தில் இன்னொரு வீடியோ வெளியாகியது. அது, உத்தரப் பிரதேச மாநிலத்தின் பைரியா சட்டமன்ற உறுப்பினரும், பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவருமான சுரேந்தர் சிங், கோமியம் குடிக்கும் வீடியோவாகும். மூன்று நிமிடங்களுக்கு மேல் ஓடக்கூடிய அந்த வீடியோவில், கொரோனாவால் ஒட்டுமொத்த நாடும் பெரும் பிரச்னைகளை சந்தித்து வரக்கூடிய நிலையில், நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றாக கோமியம் குடிக்க முன்வர வேண்டும் என சுரேந்தர் சிங் வேண்டுகோள் விடுக்கிறார்.

    அதுமட்டுமில்லாமல், அதனை எப்படி குடிக்க வேண்டும், எந்த நேரத்தில் குடிக்க வேண்டும், எப்படியெல்லாம் உடலுக்குள் அது செயல்படுகிறது உள்ளிட்ட விளக்கங்களும் கூறுகிறார். கொரோனா பாதிப்பு தனக்கு இதுவரை ஏற்படவில்லை என்றும், ஒரு நாளைக்கு 18 மணி நேரத்திற்கும் மேலாக உழைத்தும் தான் ஆரோக்கியமாக இருப்பதற்கு முழு காரணம், கோமியம் குடிப்பதுதான் எனவும் அந்த வீடியோவில் குறிப்பிடுகிறார் எம்.எல்.ஏ சுரேந்தர் சிங்.

    இதுபோன்ற செயல்கள் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகின்றன. இதற்கிடையே, உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், இந்த மாட்டுச் சாணக் குளியல் வீடியோவை பகிர்ந்து, "நாங்கள் இதை நினைத்து அழ வேண்டுமா அல்லது சிரிக்க வேண்டுமா..." என்று ஆதங்கத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
    Next Story
    ×