search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    வீடுவீடாக சென்று தடுப்பூசி செலுத்தியிருந்தால், ஏராளமான உயிர்களை காப்பாற்றியிருக்கலாம்- மும்பை ஐகோர்ட்

    இந்தியாவில் ஜனவரி 16-ந்தேதியில் இருந்தே கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தாலும், பெரும்பாலானோர் இன்னும் எடுத்துக் கொள்ளவில்லை.
    கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலையின் தாக்கத்தை எதிர்கொள்ள முடியாமல் மத்திய மற்றும் மாநில அரசுகள் திண்டாடி வருகின்றன. கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட ஆரம்ப காலத்தில், அதைப்பற்றி யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

    தற்போது 2-வது அலையை கண்டு மிரண்டுபோனபின், தடுப்பூசி செலுத்தினால்தான் தாக்குப்பிடிக்க முடியும் என்ற நிலைக்கு மக்களும், அரசுகளும் தள்ளப்பட்டுள்ளன. ஆனால் இந்த நேரத்தில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது.

    ஆரம்ப காலத்தில் சுகாதாரப் பணியாளர்களுக்கும், முன்கள பணியார்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன்பின் 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு செலுத்தப்பட்டது. ஆனால் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு செயல்படவில்லை. தேவைப்படுவோர் செலுத்திக் கொள்ளலாம் என அரசு இரண்டு மனதோடு கூறியது. இதனால் மக்கள் ஆர்வம் காட்டவில்லை. தற்போது சூழ்நிலை மாறியுள்ளது.

    மும்பை உயர்நீதிமன்றம்

    இந்த நிலையில் மும்பை உயர்நீதிமன்றத்தில் கொரோனா தடுப்பூசி தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றம் ‘‘மூத்த குடிமக்களுக்கு வீடுவீடாக சென்று கடந்த சில மாதங்களுக்கு முன்பே தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தால் ஏராளமான உயிர்களை காப்பாற்றியிருக்க முடியும்’’ என்ற கருத்து தெரிவித்தது.
    Next Story
    ×