search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடியூரப்பா
    X
    எடியூரப்பா

    2 கோடி தடுப்பூசிகள் வாங்க சர்வதேச டெண்டர் விட கர்நாடக அரசு முடிவு

    கர்நாடக மாநிலத்தில் தடுப்பூசி பற்றாக்குறையை தீர்த்து அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி செலுத்த முதல்வர் எடியூரப்பா தலைமையிலான அரசு 2 கோடி தடுப்பூசிகளை வாங்க சர்வதேச டெண்டர் விட திட்டத்தை முடிவு செய்துள்ளது.

    கர்நாடக மாநிலத்தில் மக்களுக்கு போதிய அளவில் தடுப்பூசி கிடைக்கவில்லை. மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் விவரங்களை இரண்டு நாளில் தெரிவிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்த நிலையில் இன்று மேற்கண்ட முடிவை அரசு எடுத்துள்ளது. இதன் மூலம் தடுப்பூசி பெற சர்வதேச டெண்டர் கோரியுள்ள மகாராஷ்டிரா உத்திரப்பிரதேசம் மேற்கு வங்கம் ராஜஸ்தான் ஒடிசா தெலுங்கானா மாநிலங்களில் வரிசையில் கர்நாடகாவும் சேர்ந்துள்ளது.

    தடுப்பூசி கிடைக்கவில்லை என்று மக்கள் யாரும் பீதியடைய தேவையில்லை. அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று முதல்வர் எடியூரப்பா தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் முதல்வர் எடியூரப்பா அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கொரோனா தடுப்பூசி


    கர்நாடக மாநிலத்தில் தடுப்பூசி பற்றாக்குறையை தீர்த்து அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி செலுத்த முதல்வர் எடியூரப்பா தலைமையிலான அரசு 2 கோடி தடுப்பூசிகளை வாங்க சர்வதேச டெண்டர் விட திட்டத்தை முடிவு செய்துள்ளது.

    18 வயது முதல் 44 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த இத்திட்டம் பயனுள்ளதாக இருக்கும்.

    பைசர் மற்றும் மாடர்னா நிறுவன தடுப்பூசிகளை வாங்க கர்நாடக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.
    Next Story
    ×