search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆக்சிஜன் உற்பத்தி நிலையம்
    X
    ஆக்சிஜன் உற்பத்தி நிலையம்

    ஜெர்மனியில் இருந்து வந்த ஆக்சிஜன் தயாரிப்பு நிலையம் உற்பத்தியை தொடங்கியது

    இந்தியாவில் கொரோனா நோயாளிகளுக்கான மருத்துவ ஆக்சிஜனுக்கு கடும் தட்டுப்பாடு நிலவியதால், வெளிநாடுகள் ஆக்கிஜன் உபகரணங்கள் வழங்கி உதவி புரிந்து வருகின்றன.
    இந்தியாவில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் மிகத் தீவிரமாக உள்ளது. தற்போது நோயாளிகளுக்கு ஆக்சிஜன் அதிக அளவில் தேவைப்படுகிறது. தினந்தோறும் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருவதால் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

    இதனால் வெளிநாடுகள் ஆக்சிஜன் செறிவூட்டிகள், திரவநிலை ஆக்சிஜன், ஆக்சிஜன் தயாரிக்கும் நிலையம் போன்றவற்றை வழங்கி உதவி செய்து வருகின்றன.

    ஜெர்மனி ஆக்சிஜன் தயாரிக்கும் நிலையத்தை இந்தியாவிற்கு வழங்கியது. அப்படி வழங்கப்பட்ட நிலையம் ஒன்று டெல்லியில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் கொரோனா மருத்துவமனையில் அமைக்கப்பட்டது. அதை இந்தியாவுக்கான ஜெர்மனி தூதர் வால்டர் ஜே லிண்ட்னர் இன்று தொடங்கி வைத்தார்.

    ஆக்சிஜன் உற்பத்தி நிலையம்

    ஆக்சிஜன் தயாரிக்கும் நிலையத்தை தொடங்கி வைத்த லிண்ட்னர் ‘‘தேவைப்படும் நண்பர்கள் மற்ற நண்பர்களிடமிருந்து எதிர்பார்க்கலாம். இந்தியாவுக்காக நாம் செய்வது போலவே இந்தியாவும் நமக்காகவே செய்யும். கொரோனா பாதிப்பு தொடங்கத்தில் இருந்து இதுவரை எங்களுக்கும், உலகிற்கும் நிறைய உதவியாக இருந்த இந்தியாவிற்கு இந்த உதவியை நான் திருப்பித் தருகிறேன்’’ எனக் தெரிவித்தார்.
    Next Story
    ×