search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    2-வது டோஸ்-க்கு முன்னுரிமை வழங்கவும்: மாநிலங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்

    முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள், 2-வது டோஸ்க்கான நீண்ட நாட்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
    இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் 16-ந்தேதி முதன்முதலாக தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. ஏப்ரல் 1-ந்தேதியில் இருந்து 60 வயதிற்கு மேற்பட்ட, 45 வயதிற்கு மேற்பட்ட இணைநோய் உள்ள இந்திய பொது மக்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 1-ந்தேதியில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

    முதலில் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ள மக்கள் அச்சமாக இருந்தனர். இந்தியாவில் கொரோனா 2-வது அலை சூறாவளியாக கிளம்ப, தடுப்பூசி போடுவதில் மக்கள் ஆர்வம் காட்டினர்.

    இதனால் எல்லா மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. முதல் டோஸ் போட்டுக்கொண்டவர்கள் குறிப்பிட்ட நாட்களில் 2-வது டோஸ் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் முதல் டோஸ்க்கு லட்சக்கணக்கானோர் பதிவு செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் முதல் டோஸ் செலுத்தியவர்களுக்கு 2-வது டோஸ் செலுத்த முன்னுரிமைய அளிக்க வேண்டும். மத்திய அரசு இதற்காக 70 சதவீத டோஸ்களை வழங்க இருக்கிறது என்று தெரிவித்துள்ளது.

    மே 15 முதல் 31-ந்தேதி வரைக்கான தடுப்பூசிகள் 14-ந்தேதி அனுப்பி வைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இன்று காலை 17,27,10,066 தடுப்பூசி டோஸ்கள் 25,15,519 செசன்ஸ் மூலம் செலுத்தப்பட்டுள்ளது. 

    கோப்புப்படம்

    45 வயது முதல் 60 வயதினருக்கு 5,55,10,630 முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ள நிலையில், 71,95,632 2-வது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. 

    60 வயதிற்கு மேற்பட்டோருக்கு 5,38,06,205 முதல் டோஸ், 1,56,60,702 2-வது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 5,24,731 டோஸ் 18 வயது முதல் 44 வயதினருக்கு முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. மொத்தமாக 25,59,339 டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது.
    Next Story
    ×