search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    ஆந்திராவில் இருந்து ஐதராபாத்துக்கு சிகிச்சைக்கு சென்ற கொரோனா நோயாளிகளை போலீசார் தடுத்து நிறுத்தினர்

    தெலுங்கானாவை சேர்ந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க போதிய படுக்கை வசதிகள் இல்லை, இந்த நிலையில் வெளிமாநிலங்களில் இருந்து வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    திருமலை:

    தெலங்கானா மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    இந்த நிலையில், வெளிமாநிலங்களில் இருந்து தினமும் 400 முதல் 500 ஆம்புலன்ஸ்களில் நோயாளிகள் சிகிச்சைக்காக ஐதராபாத் வந்தபடி உள்ளனர். குறிப்பாக ஆந்திர மாநிலத்தில் உள்ள கிருஷ்ணா, குண்டூர், அனந்தபுரம், விசாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் அருந்து கொரோனா நோயாளிகள் மேல்சிகிச்சைக்காக ஐதராபாத் செல்கின்றனர்.

    இதனால் ஐதராபாத்தில் கொரோனா நோயாளிகன் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும், மாநிலத்தில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிதது வருகிறது. இதனால், தெலுங்கானாவை சேர்ந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க போதிய படுக்கை வசதிகள் இல்லை, இந்த நிலையில் வெளிமாநிலங்களில் இருந்து வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் ஆந்திராவிலிருந்து தெலுங்கானாவுக்கு வந்த ஆம்புலன்ஸ்களை மாநில எல்லைகளில் தெலங்கானா போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    இதனால் அவசர சிகிச்சைக்காக செல்லக்கூடிய நோயாளிகளும் கடும் அவதிக்குள்ளாகினர். இதுகுறித்து தகவலறிந்த கர்னூல் எஸ்.பி. போலீசாருடன் பேசி அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதையடுத்து அவசர சிகிச்சைக்கு செல்லக் கூடிய நோயாளிகளை போலீசார் அனுப்பினர்.

    கொரோனா நோயாளிகள் மாநில எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டதற்கு ஆந்திர மாநிலத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    கடந்த 2014-ம் ஆண்டு நடந்த மாநில பிரிவினை மசோதாவில் தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத் ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலத்திற்கும் 10 ஆண்டுகளுக்கு ஒருங்கிணைந்த தலைநகராக இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.

    தற்போது 8 ஆண்டுகள் மட்டுமே நிறைவடைந்துள்ளது. இன்னும் 2 ஆண்டுகள் ஐதராபாத்தை தலைநகராக பயன்படுத்துவதற்கான உரிமைகள் இருக்கிறது. நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க செல்லும் ஆம்புலன்ஸ்களை மாநில எல்லையில் போலீசார் தடுத்து நிறுத்துவது கண்டிக்கத்தக்கது என குற்றம்சாட்டி உள்ளனர்.

    இது குறித்து தெலுங்கானா மற்றும் ஆந்திர மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும் என கேட்டு கொண்டுள்ளனர்.

    Next Story
    ×