search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கவுரி அம்மாள்
    X
    கவுரி அம்மாள்

    கேரளாவில் மூத்த அரசியல் தலைவர் 102 வயது கவுரி அம்மாள் மரணம்

    உலகில் ஜனநாயக ரீதியாக தேர்தல் மூலம் வெற்றி பெற்ற முதல் பெண் தலைவர்களில் கவுரி அம்மாள் ஒருவர். 1957, 1967, 1980, 1987 ஆகிய காலக்கட்டங்களில் கம்யூனிஸ்டு கட்சி கேரளா மாநிலத்தில் ஆட்சி அமைத்தபோது மந்திரி பதவி வகித்தார்.
    திருவனந்தபுரம்:

    கேரளாவின் மூத்த அரசியல் தலைவர் கவுரி அம்மாள் (வயது 102). கணவர் தாமஸ், நம்பூதிரிபாடு அமைச்சரவையில் மந்திரியாக இருந்தவர். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக முதுமையின் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பும் ஏற்பட்டது. இந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

    கொரோனா வைரஸ்

    மூத்த அரசியல் தலைவரான கவுரி அம்மாள், கேரளாவில் கம்யூனிஸ்டு கட்சியை நிறுவிய தலைவர்களில் ஒருவர் ஆவார். உலகில் ஜனநாயக ரீதியாக தேர்தல் மூலம் வெற்றி பெற்ற முதல் பெண் தலைவர்களில் ஒருவர். 1957, 1967, 1980, 1987 ஆகிய காலக்கட்டங்களில் கம்யூனிஸ்டு கட்சி கேரளா மாநிலத்தில் ஆட்சி அமைத்தபோது மந்திரி பதவி வகித்தார்.

    கேரளாவில் 12 முறை தேர்தலில் வெற்றி பெற்று நீண்டகாலம் எம்.எல்.ஏ.வாக இருந்தவர். இந்த நிலையில் 1994-ம் வருடம் கருத்துவேறுபாடு காரணமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் ஜனாதிபத்தியா சம்ரக்ஜனா சமதி என்ற கட்சியை நடத்தி வந்தார். அவரது மறைவையொட்டி பல்வேறு கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×