search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வெப்ப பரிசோதனை
    X
    கொரோனா வெப்ப பரிசோதனை

    தாராவியில் உச்சத்தில் இருந்து இறங்கிய கொரோனா: 2 மாதத்திற்கு பிறகு ஒற்றை இலக்க பாதிப்பு

    தாராவியில் முதன் முறையாக கடந்த ஆண்டு (2020) ஏப்ரல் 1-ந் தேதி கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. சுமார் 2.5 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ள தாராவியின் மக்கள் தொகை 6 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேல் என்பது குறிப்பிடத்தக்கது.
    மும்பை :

    மராட்டியத்தில் ஊரடங்கு போன்ற கடும் கட்டுப்பாடுகள் காரணமாக கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. குறிப்பாக தலைநகர் மும்பையிலும் பாதிப்பு வெகுவாக குறைந்து உள்ளது. இதிலும் ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான தாராவியிலும் தொற்று நோய் பரவல் பன்மடங்கு குறைந்து உள்ளது.

    அதன்படி 2 மாதத்ததிற்கு பிறகு நேற்று தாராவியில் ஒற்றை இலக்கத்தில் பதிவாகி 9 பேர் மட்டும் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த மார்ச் 11-ந் தேதி 7 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். அதன் பிறகு பாதிப்பு எண்ணிக்கை மின்னல் வேகம் எடுத்து கடந்த ஏப்ரல் 8-ந் தேதி அதிகபட்சமாக 99 ஆக உயர்ந்தது.

    இந்தநிலையில் தற்போது தொற்று பாதிப்பு குறைந்து வருவது உழைக்கும் வர்க்கமான தாராவி மக்களிடம் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

    தற்போது தாராவியில் 727 பேர் நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 5 ஆயிரத்து 561 பேர் குணமடைந்து உள்ளனர்.

    தாராவியில் முதன் முறையாக கடந்த ஆண்டு (2020) ஏப்ரல் 1-ந் தேதி கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. சுமார் 2.5 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ள தாராவியின் மக்கள் தொகை 6 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேல் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×