search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய மந்திரி ஹர்தீப் சிங் பூரி
    X
    மத்திய மந்திரி ஹர்தீப் சிங் பூரி

    புதிய பிரதமர் இல்லம்: ராகுல் காந்தியின் விமர்சனத்துக்கு மத்திய மந்திரி பதிலடி

    சென்ட்ரல் விஸ்டா திட்டத்தை காட்டிலும் தடுப்பூசி திட்டத்திற்கு 2 மடங்கு தொகை வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய மந்திரி ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார்.
    புதுடெல்லி:

    தற்போதைய கொரோனா பரவல் சூழலில் புதிய பிரதமர் இல்லம் தேவையில்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காலியான ஆக்சிஜன் சிலிண்டர்களை கொண்டு நீண்ட வரிசையில் காத்திருப்போரின் படத்தையும், டெல்லி ராஜபாதையில் நடைபெறும் சென்ட்ரல் விஸ்டா திட்டப் பணிகளின் படத்தையும் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, நாட்டுக்கு புதிய பிரதமர் இல்லம் தேவையில்லை என்றும், நாட்டுக்கு ஆக்சிஜன் தேவைப்படுகிறது எனவும் பதிவிட்டுள்ளார்.

    ராகுல் காந்தியின் இந்த விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்துள்ளார் மத்திய மந்திரி ஹர்தீப் சிங் பூரி. முன்னுரிமை எதற்கு என்பது எங்களுக்கு தெரியும் என்று கூறி உள்ள அவர், சென்ட்ரல் விஸ்டா திட்டத்தை காட்டிலும் தடுப்பூசி திட்டத்திற்கு 2 மடங்கு தொகை வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். சுகாதாரத் துறைக்கான இந்த ஆண்டு பட்ஜெட் ரூ.3 லட்சம் கோடி என்றும் அவர் குறிப்பிட்டார்.

    சென்ட்ரல் விஸ்டா திட்டம் ஒன்றும் புதிய திட்டம் அல்ல என்றும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் போது, புதிய பாராளுமன்றத்தின் அவசியம் குறித்து காங்கிரஸ் தலைவர்கள் கடிதம் எழுதியதாகவும் மத்திய மந்திரி சுட்டிக்காட்டி உள்ளார்.
    Next Story
    ×