என் மலர்tooltip icon

    செய்திகள்

    லாலு பிரசாத் யாதவ்
    X
    லாலு பிரசாத் யாதவ்

    கட்சி எம்எல்ஏ-க்களுடன் லாலு பிரசாத் யாதவ் ஆலோசனை

    சிறையில் இருந்து வெளியே வந்துள்ள ராஷ்டிர ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ், அக்கட்சி எம்எல்ஏ-க்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.
    பீகார் மாநில முன்னாள் முதலமைச்சரும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் மீது கால்நடை தீவன ஊழல் வழக்கு போடப்பட்டது. இது தொடர்பான நான்கு வழக்குகளில் அவருக்கு ஜெயலில் தண்டனை வழங்கப்பட்டது.

    மூன்று வழக்கில் ஜாமீன் கிடைத்த நிலையில், ஒரு வழங்கில் ஜாமீன் கிடைக்காமல் இருந்தது. கருவூலத்தில் இருந்து அதிகமாக பணம் எடுத்த அந்த வழக்கில், விதிக்கப்பட்ட தண்டனையில் பாதிக்காலம் முடிவடைந்ததால் கடந்த மாதம் ஜாமீன் பெற்றார்.

    இதனால் சிறையில் இருந்து லாலு பிரசாத் யாதவ் வெளியே வந்தார். இந்த நிலையில் இன்று காணொலி காட்சி மூலம் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி எம்எல்ஏ-க்களிடம் காணொலி காட்சி மூலம் கொரோனா தொற்றின் சூழ்நிலை குறித்து கேட்டறிந்தார்.

    கலந்து கொண்ட எம்.எல்.ஏ.-க்கள்

    கடந்த மாதம் பீகாரில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் லாலு மகன் தேஜஸ்வி தலைமையில் ராஷ்டிரிய ஜனதா தளம் மெகா கூட்டணி அமைத்து களம் இறங்கியது. தனிப்பட்ட கட்சியாக அதிக இடங்களை பிடித்த போதிலும், கூட்டணி கட்சிகள் சறுக்கியதால் ஆட்சி அமைப்பதற்கு போதுமான இடங்களை பிடிக்க முடியாமல் போனது.

    கலந்து கொண்ட எம்.எல்.ஏ.-க்கள்

    பாஜனதா கூட்டணி 125 இடங்களிலும், மெகா கூட்டணி 110 இடங்களிலும் வெற்றி பெற்றன. ராஷ்டிரிய ஜனதா தளம் 75 இடங்களிலும், பா.ஜனதா 74 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களிலும் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 19 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
    Next Story
    ×