search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா விமானம் தாங்கி போர்க்கப்பலில் தீ விபத்து

    ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா கடந்த 2013-ம் ஆண்டு ரஷியாவிடம் இருந்து வாங்கப்பட்டது ஆகும். அதற்கு முன் அந்த கப்பல் ரஷிய கடற்படையில் 1987-ம் ஆண்டு முதல் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
    மும்பை:

    இந்திய கடற்படைக்கு சொந்தமான விமானம் தாங்கி போர்க்கப்பல் ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா கா்நாடக மாநிலம் கர்வாா் துறைமுகப்பகுதியில் நிறுத்தப்பட்டு உள்ளது. இதில் நேற்று காலை கப்பலில் கடற்படை வீரர்கள் தங்கும் பகுதியில் இருந்து புகை வந்து உள்ளது. இதை கவனித்த கப்பலில் இருந்த வீரர்கள் உடனடியாக தீயை அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    மேலும் விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை எனவும், பெரிய அளவில் பொருட்சேதமும் இல்லை என கடற்படை தெரிவித்து உள்ளது. ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா கடந்த 2013-ம் ஆண்டு ரஷியாவிடம் இருந்து வாங்கப்பட்டது ஆகும். அதற்கு முன் அந்த கப்பல் ரஷிய கடற்படையில் 1987-ம் ஆண்டு முதல் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

    284 மீட்டர் நீளமுள்ள ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா சுமார் 3 கால்பந்து மைதான நீளம் கொண்டது. மேலும் இதில் 22 அடுக்குகள் உள்ளன. இதில் 1,600 பேர் பயணம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×