search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராகுல் காந்தி
    X
    ராகுல் காந்தி

    கொரோனா தடுப்பூசிக்கான நிதியை முழுமையாக பயன்படுத்தவில்லை - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

    மத்திய பட்ஜெட்டில் தடுப்பூசிக்கு அனுமதிக்கப்பட்ட 35 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.4,417 கோடி மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை, அனைத்து மாநிலங்களிலும் மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக தினமும் கொரோனாவால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இதற்கிடையில் பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணியை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.

    கோப்புபடம்

    இந்த நிலையில் கொரோனா தடுப்பூசிக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் குறைந்த அளவே பயன்படுத்தப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்த செய்தி ஒன்றை, அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    அந்த செய்தியில், மத்திய பட்ஜெட்டில் தடுப்பூசிக்கு அனுமதிக்கப்பட்ட 35 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.4,417 கோடி மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த செய்தியை பகிர்ந்து, கொரோனா தடுப்பூசி நிதி குறைவாக பயன்படுத்தப்படுகிறது, மனித உயிர் குறைத்து மதிப்பிடப்படுகிறது ஆனால் பிரதமரின் சுயபெருமை மட்டும் அதிகரித்துள்ளது என்று ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.

    Next Story
    ×