search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மந்திரி சுரேஷ்குமார்
    X
    மந்திரி சுரேஷ்குமார்

    மந்திரி பதவியை ராஜினாமா செய்ய சுரேஷ்குமார் முடிவு?

    24 கொரோனா நோயாளிகள் இறந்த விவகாரத்தில் மந்திரி பதவியை ராஜினாமா செய்ய சுரேஷ்குமார் முடிவு செய்து இருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
    கொள்ளேகால் :

    பெங்களூரு ராஜாஜிநகர் தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ.வாக பணியாற்றி வருபவர் சுரேஷ்குமார். இவர் கர்நாடக பள்ளிகல்வித்துறை மந்திரியாகவும், சாம்ராஜ்நகர் மாவட்ட மந்திரியாகவும் உள்ளார். இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி சாம்ராஜ்நகர் மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக 24 கொரோனா நோயாளிகள் உயிரிழந்தனர்.

    இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று மந்திரி சுரேஷ்குமார், சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் 24 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று தனது மந்திரி பதவியை சுரேஷ்குமார் ராஜினாமா செய்ய முடிவு செய்து இருந்தார். மேலும் இதுகுறித்து தனது ஆதரவாளர்களுடன் அவர் ஆலோசித்து வந்ததாகவும் தெரிகிறது. அப்போது உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்க வேண்டும் என்றால் பதவியை ராஜினாமா செய்து விடுங்கள் என்று ஆதரவாளர்கள் கூறியதாக தெரிகிறது.

    இதனால் ராஜினாமா செய்ய முடிவு செய்த சுரேஷ்குமார், முதல்-மந்திரி எடியூரப்பாவை சந்தித்து பேசி உள்ளார். அப்போது என்னால் அரசுக்கு அவப்பெயர் ஏற்பட கூடாது. எனவே 24 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று எனது மந்திரி பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று சுரேஷ்குமார் கூறியதாக தெரிகிறது. ஆனால் இதை ஏற்க மறுத்த எடியூரப்பா நீங்கள் ராஜினாமா செய்ய வேண்டிய அவசியம் இல்லை. எக்காரணம் கொண்டும் மந்திரி பதவியை ராஜினாமா செய்ய வேண்டாம் என்று சுரேஷ்குமாரிடம் கூறி அவரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
    Next Story
    ×