search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை
    X
    கொரோனா பரிசோதனை

    கேரளாவில் இன்று புதிதாக 37,190 பேருக்கு கொரோனா தொற்று

    கேரளாவில் இன்னும் கொரோனா தொற்று கட்டுக்குள் வராமல் அதிரித்துக் கொண்டே வரும் நிலையில், இன்று 57 பேர் உயிரிழந்துள்ளனர்.
    தென்மாநிலங்களில் கேரளாவில் கொரோனா தொற்று அதிகமாக உள்ளது. கடந்த வருடம் கொரோனா தொற்று ஆரம்பித்த காலத்தில் கேரளா அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு கொரோனா தொற்றை சிறப்பான வகையில் கட்டுப்படுத்தியது.

    தளர்வுகள் அறிவிக்கப்பட்டதும் கேரளாவில் கொரோனா தொற்று அத்துமீறி சென்றது. அதன்பின் மகாராஷ்டிராவிற்கு அடுத்தப்படியாக 2-வது இடத்தில் கேரள இருந்து வந்தது. தற்போது இந்தியா அளவில் ஏறக்குறைய எல்லா மாநிலங்களிலும் அதிகரித்து வரும் நிலையில், கேரளாவிலும் உச்சத்தில் இருக்கிறது.

    இன்று கேரள மாநிலத்தில் புதிதாக 37,190 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 26,148 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், 57 பேர் உயிரிழந்துள்ளனர். 

    தற்போது வரை 13,39,257 பேர் குணமடைந்துள்ள நிலையில், 3,56,872 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
    Next Story
    ×