search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரளா சட்டசபை தேர்தல்
    X
    கேரளா சட்டசபை தேர்தல்

    கேரளாவில் 84 இடங்களில் இடதுசாரி கூட்டணி முன்னிலை

    கேரளாவில் உள்ள 140 தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், தற்பொழுது 84 இடங்களில் இடதுசாரி கூட்டணி முன்னிலை வகிக்கிறது.
    கேரளாவில் உள்ள 140 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. கேரளாவில் ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணிக்கும் கடுமையான போட்டி நிலவியது. மேலும் பாஜக, தனித்து போட்டியிட்டது.

    கேரளாவில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரபை தேர்தலில் இடதுசாரி கூட்டணி பெரும் வெற்றி பெற்றது. காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் இடையே மட்டுமே இதுவரை நேரடி போட்டி நிலவும் நிலையில், இந்த முறை பாஜகவும் களமிறங்கியுள்ளது. கேரளாவில் தற்பொழுது வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், தற்பொழுது 84 இடங்களில் இடதுசாரி கூட்டணியும், 52 இடங்களில் காங்கிரஸ் கூட்டணியும் , பாஜக 1 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.
    Next Story
    ×