search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சோனியா காந்தி
    X
    சோனியா காந்தி

    அதிகரிக்கும் கொரோனா... அரசு விழித்துக்கொள்ள வேண்டும் -சோனியா காந்தி வலியுறுத்தல்

    கொரோனாவை எதிர்கொள்ள தேசிய அளவில் கொள்கை தேவை என சோனியா காந்தி கூறி உள்ளார்.
    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனா வைரசின் கோரத்தாண்டவம் கட்டுக்கடங்காமல் செல்லும் நிலையில், கொரோனா தடுப்பு விஷயத்தில் மத்திய அரசின் செயல்பாடுகளை காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில், கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியதாவது:-

    நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால், அனைத்து அரசியல் கட்சிகளுடனும் ஆலோசனை நடத்தி, கொரோனாவை எதிர்கொள்ள நாடு முழுவதும் ஒரு கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும். மத்திய மற்றும் மாநில அரசுகள் விழித்தெழுந்து தங்கள் பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டிய நேரம் இது. தொழிலாளர்கள் இடம்பெயர்வது நிறுத்தப்பட வேண்டும். இந்த நெருக்கடியான சூழல் முடிவுக்கு வரும் வரை குறைந்தபட்சம், 6,000 ரூபாய் அவர்களின் வங்கிக் கணக்குகளில் சேர்க்கப்பட வேண்டும்.

    மக்கள் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்த வேண்டும். நாடு முழுவதும் பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும். மருத்துவ ஆக்சிஜன் மற்றும் பிற மருந்துகளையும் போர்க்கால அடிப்படையில் ஏற்பாடு செய்ய வேண்டும். உயிர் காக்கும் மருந்துகள் கள்ளச்சந்தையில் விற்கப்படுவதை தடுக்க வேண்டும். 

    தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் கொரோனா நோயாளிகளுக்கு சேவை செய்யும் அனைத்து மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கும் தலை வணங்குகிறேன். நாம் வேற்றுமைகளைக் கடந்து செல்ல வேண்டும். நம் நாடு கடந்த காலங்களிலும் இதேபோன்ற பல பெரிய சிக்கல்களில் இருந்து மீண்டுள்ளது. கொரோனாவுக்கு எதிரான இந்த போரில் காங்கிரஸ் கட்சி, மத்திய அரசுக்கு துணை நிற்கும்.

    இவ்வாறு சோனியா காந்தி கூறினார்.
    Next Story
    ×