search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி
    X
    பிரதமர் மோடி

    குஜராத் தீ விபத்து: முதல் மந்திரி தலா ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவிப்பு- பிரதமர் மோடி இரங்கல்

    போலீசார் மற்றும் மருத்துவமனை நிர்வாகம் உதவியுடன் நோயாளிகளை நாங்கள் வேறு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்ல முடிந்தது.
    புதுடெல்லி:

    குஜராத்தின் பரூச் நகரில் பட்டேல் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.  இந்த மையத்தின் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ.) நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் திடீரென தீப்பிடித்து கொண்டது.

    இதுபற்றிய தகவல் தீயணைப்பு துறைக்கு 1 மணியளவில் தெரிவிக்கப்பட்டது.  இதனை தொடர்ந்து தீயணைப்பு துறையினர் உடனடியாக சம்பவ பகுதிக்கு சென்று போராடி தீயை அணைத்தனர்.

    இந்த சூழலில், பட்டேல் மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.  இதுபற்றி காவல் கண்காணிப்பாளர் ராஜேந்திரா கூறும்பொழுது, ஐ.சி.யூ.வில் மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.  தீ அணைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது.

    இந்த தீ விபத்தில் 12 பேர் கொல்லப்பட்டு இருக்க கூடும் என முதற்கட்ட அறிக்கைகள் தெரிவிக்கின்றன.  எனினும், முழு விவரம் வெளிவந்த பின்னரே அவற்றை பற்றி கூற முடியும் என கூறினார்.

    இந்நிலையில், அந்த மையத்தின் அறங்காவலரான ஜுபேர் பட்டேல் செய்தியாளர்களிடம் இன்று கூறும்பொழுது, இது எங்களுக்கு மட்டுமின்றி, பரூச் நகர ஒட்டுமொத்த மக்களுக்கும் ஏற்பட்ட துரதிர்ஷ்டவச சம்பவம்.

    போலீசார் மற்றும் மருத்துவமனை நிர்வாகம் உதவியுடன் நோயாளிகளை நாங்கள் வேறு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்ல முடிந்தது.  இந்த சம்பவத்தில் 14 நோயாளிகள் மற்றும் 2 செவிலியர்கள் உயிரிழந்து உள்ளனர் என தெரிவித்து உள்ளார்.  இதனால் தீ விபத்து சம்பவத்தில் பலி எண்ணிக்கை 12ல் இருந்து 16 ஆக உயர்ந்து உள்ளது.

    குஜராத் மருத்துவமனையில் தீ விபத்தில் உயிரிழந்த நபர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார்.  இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், பரூச்சில் மருத்துவமனை ஒன்றில் தீ விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளை அறிந்து வேதனை அடைந்தேன்.  துயரத்தில் வாடும் அவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல்கள் என தெரிவித்து உள்ளார்.

    இதேபோன்று, குஜராத்தில் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தர்களுக்கு முதல் மந்திரி விஜய் ரூபானி இரங்கல் தெரிவித்து உள்ளதுடன் அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்து உள்ளார்.
    Next Story
    ×