search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆக்சிஜன்
    X
    ஆக்சிஜன்

    ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் பயன்பாட்டை கண்காணியுங்கள்- மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

    ஆக்சிஜனை விவேகத்துடன் பயன்படுத்துமாறு மாநிலங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. மருத்துவ ரீதியில் தேவைப்படாதவர்களுக்கு ஆக்சிஜன் செலுத்துவதை நிறுத்த வேண்டும்.
    புதுடெல்லி:

    நாடு முழுவதும் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை தினமும் 3 லட்சத்துக்கு மேலாக அதிகரித்து வருகிறது. கொரோனா சிகிச்சையில் ஆக்சிஜன் முக்கிய பங்கு வகிக்கிறது. நோயாளிகள் எண்ணிக்கை பெருகும்போது, ஆக்சிஜனுக்கு பற்றாக்குறை ஏற்படுகிறது. இதை சமாளிக்க பல நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.

    இதையொட்டி மத்திய சுகாதார துறை இணைச்செயலாளர் லாவ் அகர்வால், டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மத்திய அரசு


    கொரோனா வைரஸ் தொற்று நோய் தொடங்கியதில் இருந்து, ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளை மத்திய அரசு முக்கிய மருத்துவ தலையீடாக அடையாளம் கண்டது. 1 லட்சத்து 2 ஆயிரத்து 400 ஆக்சிஜன் சிலிண்டர்களை தேசிய அளவில் கடந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் மத்திய அரசு கொள்முதல் செய்தது. ஏப்ரல் 21-ந் தேதியன்று 1 லட்சத்து 27 ஆயிரம் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு ஆர்டர் அளிக்கப்பட்டுள்ளது.

    ஆக்சிஜனை விவேகத்துடன் பயன்படுத்துமாறு மாநிலங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. மருத்துவ ரீதியில் தேவைப்படாதவர்களுக்கு ஆக்சிஜன் செலுத்துவதை நிறுத்த வேண்டும். தனியார் ஆஸ்பத்திரிகள் உள்ளிட்ட அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் ஆக்சிஜன் பயன்பாட்டை கண்காணிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×