search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வைரல் வீடியோ ஸ்கிரீன்ஷாட்
    X
    வைரல் வீடியோ ஸ்கிரீன்ஷாட்

    அசாம் நிலநடுக்கத்தில் எடுக்கப்பட்டதாக கூறி வைரலாகும் வீடியோ

    சில தினங்களுக்கு முன் வட இந்திய பகுதிகளில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் கட்டிங்கள் சேதமடைந்தன.


    அசாம் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் ஏப்ரல் 28 ஆம் தேதி நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவு கோளில் இது 6.4 ஆக பதிவானது. நிலநடுக்கத்தில் கட்டிடங்கள் விரிசல் ஏற்பட்டது. மேலும் சாலைகள் மற்றும் விவசாய நிலங்களில் துளை ஏற்பட்டது.

    நிலநடுக்கத்தில் எடுக்கப்பட்டதாக கூறி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவ்வாறு வைரலாகும் வீடியோவில் வீட்டினுள் நிலநடுக்கம் காரணமாக பயங்கர சத்தத்துடன் கட்டிடம் அசையும் காட்சிகள் இடம்பெற்று இருக்கின்றன.  

     வைரல் பதிவு ஸ்கிரீன்ஷாட்

    வைரல் வீடியோவை ஆய்வு செய்ததில், அது இரண்டு ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. மேலும் இந்த வீடியோவுக்கும் அசாம் மாநிலத்தில் சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரியவந்துள்ளது.

    வைரல் பதிவுகளில் பலர் இந்த வீடியோ கவுகாத்தியில் எடுக்கப்பட்டதாக கருத்து தெரிவித்து இருக்கின்றனர். அந்த வகையில் இந்த வீடியோ சமீபத்திய நிலநடுக்கத்தின் போது எடுக்கப்படவில்லை என உறுதியாகிவிட்டது. 

    போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.

    Next Story
    ×