search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாக்களிக்க வரிசையில் நிற்கும் வாக்காளர்கள்
    X
    வாக்களிக்க வரிசையில் நிற்கும் வாக்காளர்கள்

    மேற்கு வங்காளத்தில் இறுதிக்கட்ட தேர்தல்- மதியம் வரை வாக்குப்பதிவு நிலவரம்

    மேற்கு வங்காளத்தில் நடைபெறும் இறுதிக்கட்ட தேர்தலில், அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள் மற்றும் பிரபலங்கள் காலையிலேயே வாக்குகளை பதிவு செய்தனர்.
    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதுவரை 7 கட்டங்களாக தேர்தல் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், 8-வது மற்றும் இறுதிகட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. 

    மால்டா பாகம் 2, கொல்கத்தா வடக்கு, முர்ஷிதாபாத் பாகம் 2, பிர்பும் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள 35 தொகுதிகள் இன்று தேர்தலை சந்திக்கின்றன. 35 பெண்கள் உள்பட 283 வேட்பாளர்கள் இறுதிகட்ட தேர்தல் களத்தில் உள்ளனர். அவர்களின் வெற்றி, தோல்வியை 84 லட்சத்து 77 ஆயிரத்து 728 வாக்காளர்கள் தீர்மானிக்கின்றனர். 

    மொத்தம் உள்ள 11 ஆயிரத்து 860 வாக்குச்சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெறுகிறது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

      வாக்களித்து விட்டு வெளியே வந்த கவர்னர் ஜெகதீப் தங்கார் தன் 

    அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள் மற்றும் பிரபலங்கள் காலையிலேயே வாக்குகளை பதிவு செய்தனர். கவர்னர் ஜெகதீப் தங்கார் தன் மனைவி சுதீஷ் தங்காருடன், கொல்கத்தா சோரிங்கீ வாக்குச்சாவடியில் ஓட்டு போட்டார். 

    மதியம் 11  நிலவரப்படி 37.80 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. அதிகபட்சமாக மால்டா மாவட்டத்தில் 41.67 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. பிர்பம் மாவட்டத்தில் 38.10 சதவீதம், கொல்கத்தா வடக்கு மாவட்டத்தில் 27.65 சதவீதம், முர்ஷிதாபாத்தில் 41.01 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. பிற்பகல் வாக்குப்பதிவு மேலும் விறுவிறுப்படையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×