search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவின் வலைத்தள முகப்பு
    X
    கோவின் வலைத்தள முகப்பு

    முன்பதிவு தொடங்கியது... 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி போட பதிவு செய்யலாம்

    18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளும்போது சமூக நோய் எதிர்பாற்றலை உருவாக்கி கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியும் என்று டாக்டர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.
    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் 16-ந்தேதி தொடங்கியது. முதலில் டாக்டர்கள், நர்சுகள், போலீசார் உள்ளிட்ட முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. அதன் பிறகு 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் நாள்பட்ட நோயாளிகளுக்கும் தடுப்பூசி போடப்பட்டது. தற்போது 45 வயதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது.

    கொரோனா பரவல் தீவிரமாக அதிகரித்து வருவதால் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை ஏற்று வருகிற 1-ந்தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

    தடுப்பூசி போடும் பணி

    18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளும்போது சமூக நோய் எதிர்பாற்றலை உருவாக்கி கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியும் என்று டாக்டர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

    இதையடுத்து 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள இன்று மாலை முன்பதிவு தொடங்கியது. இதற்கு http://www.cowin.gov.in என்ற இணையதளத்துக்குள் சென்று ‘ரிஜிஸ்டர் யுவர் செல்ப்’ என்பதை கிளிக் செய்யவேண்டும். பின்னர் மொபைல் போன் எண்ணை பதிவு செய்து, அந்த மொபைலுக்கு வரும் ஓடிபியை பதிவு செய்ய வேண்டும்.  வெரிபிகேசன் முடிந்து முன்பதிவுக்கான பக்கம் திறக்கப்பட்டதும், பெயர், வயது, உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.

    ஆதார் எண் உள்ளிட்ட அரசு அங்கீகரித்த அடையாள அட்டை எண்ணை பதிவு செய்து தடுப்பூசி போட முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    மேலும் கோவின் செயலி மற்றும் ‘ஆரோக்ய சேது’ செயலி மூலம் முன்பதிவு செய்யலாம். தடுப்பூசி போட பதிவு செய்பவர்கள் உள்பட 4 குடும்ப உறுப்பினர்களுக்கு ஒரே நேரத்தில் பதிவு செய்யும்போது அருகில் உள்ள தடுப்பூசி மையத்தை கண்டுபிடித்து அதற்கு ஏற்ப முன்பதிவு செய்யலாம்.
    Next Story
    ×