search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கொரோனா வராமல் தடுக்கும் உடற்பயிற்சிகள் என கூறி வைரலாகும் வீடியோ

    கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், மருத்துவர் வீடியோ வைரலாகி வருகிறது.

    இந்தியாவில் கொரோனாவைரஸ் தொற்றின் இரண்டவாது அலை மிகத்தீவிரம் அடைந்துள்ளது. நாடு முழுக்க நோயாளிகளுக்கு வழங்க போதுமான ஆக்சிஜன் கிடைப்பதில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், கொரோனாவைரஸ் தொற்று ஏற்படாமல் இருக்க அனைவரும் இந்த உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும் என கூறி வீடியோ வைரலாகி வருகிறது.

    வீடியோவில் மருத்துவர் மனிஷ் ஷர்மா, `அனைவரும் இந்த ஏழு உடற்பயிற்சிகளை செய்ய வேண்டி கேட்டுக் கொள்கிறேன். இவை உங்கள் உடலை கொரோனாவைரசை எதிர்த்து போராட உதவும். இவ்வாறு செய்யும் போது வாழ்நாள் முழுக்க உங்களுக்கு கொரோனா தொற்று ஏற்படாது. இந்த உடற்பயிற்சிகளை எங்கும், எப்போதும் செய்யலாம். இவை ஒவ்வொன்றையும் 30 நொடிகளில் மேற்கொள்ள முடியும்.' என கூறுகிறார்.

    வைரல் வீடியோ பலர் தங்களின் சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர். இதனை ஆய்வு செய்ததில் வீடியோ எவ்வித அறிவியல் ஆதாரமும் இன்றி பகிரப்பட்டு வருவது கண்டறியப்பட்டது. மத்திய பிரதேச உடல்நல துறையும் இந்த வீடியோவின் உண்மைத்தன்மை உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவித்துள்ளது.

    இந்த வீடியோ கடந்த ஆண்டு அக்டோபர் மாதமும் வைரலானது. பின் மத்திய பிரதேச உடல்நல துறை மருத்துவருக்கு நோட்டீஸ் அனுப்பியது. மேலும் அந்த வீடியோ இந்திய மெடிக்கல் கவுன்சில் மற்றும் மாநில அரசு விதிமுறைகளுக்கு எதிரானது என தெரிவித்தது. 

     வைரல் பதிவு ஸ்கிரீன்ஷாட்

    பின் அந்த மருத்துவர் கொரோனா ஏற்படாமல் இருக்க முகக்கவசம் அணிதல், அடிக்கடி கைகளை கழுவுதல் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்டவைகளை பின்பற்ற வலியுறுத்தி வீடியோ வெளியிட்டார்.

    அந்த வகையில் வைரல் வீடியோவில் உள்ள உடற்பயிற்சிகள் கொரோனாவைரஸ் தாக்காமல் இருக்க உதவும் என்ற தகவல் நிரூபிக்கப்படாத ஒன்று என தெரியவந்துள்ளது. வைரல் வீடியோ தவறானது என்பதால், தற்போது அது நீக்கப்பட்டு இருக்கிறது.

    போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன. 
    Next Story
    ×