search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்வமுடன் வாக்களித்த வாக்காளர்கள்
    X
    ஆர்வமுடன் வாக்களித்த வாக்காளர்கள்

    மேற்கு வங்காளத்தில் 7ம் கட்ட தேர்தலில் 75 சதவீதம் வாக்குப்பதிவு

    மேற்கு வங்காளத்தில் அமைதியாக நடைபெற்ற 7-ம் கட்ட தேர்தலில் 75 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளத்தில் மொத்தம் உள்ள 294 தொகுதிகள் கொண்ட சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் 6 கட்டங்களாக மொத்தம் 223 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு முடிந்துள்ளது.

    இதற்கிடையே, மால்டா, கொல்கத்தா தெற்கு, முர்ஷிதாபாத், மேற்கு பர்தமான், தெற்கு தினாஜ்பூர் ஆகிய 5 மாவட்டங்களுக்கு உட்பட்ட 34 தொகுதிகளில் 7-ம் கட்ட வாக்குப்பதிவு நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது.

    நேற்றைய தேர்தல் களத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சைகள் என 268 பேர் களத்தில் உள்ளனர். தேர்தலுக்காக 12,068 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன.

    கொரோனா தீவிரமாக பரவி வருவதால், வாக்குச்சாவடிகளில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட்டன. அனைவரும் முக கவசம் அணிந்தே வாக்களிக்க அறிவுறுத்தப்பட்டனர்.
     
    வாக்குச்சாவடிகளில் காலையிலேயே வாக்களிப்பதற்காக மக்கள் கூடினர். இதனால் பல வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசை காணப்பட்டது. முக்கிய தலைவர்கள், வேட்பாளர்கள் காலையிலேயே தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.

    வாக்களித்த மம்தா பானர்ஜி

    திரிணாமுல் காங்கிரஸ் எம்பி அபிஷேக் பானர்ஜி, கொல்கத்தா மித்ரா கல்வி நிலையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் ஓட்டு போட்டார்.

    மாலை 3:50 மணிக்கு தொகுதியில் உள்ள தன் ஓட்டுச்சாவடிக்கு சக்கர நாற்காலியில் வந்து, மம்தா தன் ஓட்டை பதிவு செய்தார்.

    இந்நிலையில், மேற்கு வங்காளத்தில் நடந்த 7-ம் கட்ட தேர்தலில் 75 சதவீதத்திற்கும் அதிகமான ஓட்டுகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து 35 தொகுதிகளுக்கான 8-வது மற்றும் இறுதிக்கட்ட ஓட்டுப்பதிவு வரும், 29ம் தேதி நடைபெறுகிறது.
    Next Story
    ×