search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இஸ்ரோ
    X
    இஸ்ரோ

    ககன்யான் திட்டத்துக்காக சிறப்பு செயற்கைக்கோள் இஸ்ரோ அனுப்புகிறது

    ‘ககன்யான்’ விண்கலம் விண்வெளியில் பூமியை தாழ்வான நிலையில் இருந்து 7 நாட்கள் சுற்றிவரும்வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது
    புதுடெல்லி:

    இந்தியா விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, இந்தியாவில் இருந்து முதன் முதலாக மனிதர்களை விண்ணுக்கு அனுப்புவதற்காக ‘ககன்யான்’ என்ற பெயரில் ரூ.10 ஆயிரம் கோடி செலவில் மிகப்பெரிய திட்டப் பணிகளை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. அதன்படி, ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் செலுத்தப்படும் ‘ககன்யான்’ விண்கலத்தில் 3 வீரர்கள் விண்வெளி செல்ல உள்ளனர்.

    ‘ககன்யான்’ விண்கலம் விண்வெளியில் பூமியை தாழ்வான நிலையில் இருந்து 7 நாட்கள் சுற்றிவரும்வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் முதல் படியாக வருகிற டிசம்பர் மாதம் ஆளில்லா விண்கலத்தை இஸ்ரோ விண்ணுக்கு அனுப்ப உள்ளது. இந்த நிலையில் விண்வெளி வீரர்களுடன் ககன்யான் விண்கலம் விண்ணுக்கு அனுப்பப்பட்ட பிறகு அந்த விண்கலத்துடனான தொடர்புக்கு உதவும் வகையில் சிறப்பு செயற்கைக்கோள் ஒன்றை விண்ணுக்கு அனுப்ப உள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

    ககன்யான் திட்டத்தின் இறுதி படியாக இந்த செயற்கைக்கோள் விண்ணுக்கு அனுப்பப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.‌ மேலும் ரூ.800 கோடி மதிப்பிலான இந்தத் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு பணிகள் நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×