search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை
    X
    கொரோனா பரிசோதனை

    கர்நாடகத்தில் புதிதாக 26,962 பேருக்கு கொரோனா: ஒரே நாளில் 190 பேர் பலி

    கர்நாடகத்தில் வைரஸ் பாதிப்பு, உயிரிழப்பில் புதிய உச்சத்தை தொட்டுள்ள நிலையில் மாநிலத்தில் புதிதாக 26,962 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வைரஸ் தொற்றுக்கு ஒரே நாளில் 190 பேர் உயிரிழந்தனர்.
    பெங்களூரு :

    கர்நாடக அரசின் சுகாதாரத்துறை நேற்றைய பாதிப்பு குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    கர்நாடகத்தில் நேற்று 1 லட்சத்து 77 ஆயிரத்து 406 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 26,962 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 12 லட்சத்து 74 ஆயிரத்து 959 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு மேலும் 190 பேர் உயிரிழந்தனர். இதனால் மாநிலத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 75 ஆக உயர்ந்துள்ளது.

    ஒரே நாளில் 8,697 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் மாநிலத்தில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்து 46 ஆயிரத்து 554 ஆக அதிகரித்துள்ளது. 1,128 பேர் மாநிலத்தின் பல்வேறு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 14 ஆயிரத்து 311 ஆக உயர்ந்துள்ளது.

    பெங்களூருவில் அதிகபட்சமாக ஒரே நாளில் 16,662 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாகல்கோட்டையில் 88 பேர், பல்லாரியில் 695 பேர், பெலகாவியில் 220 பேர், பெங்களூரு புறநகரில் 588 பேர், பீதரில் 416 பேர், சாம்ராஜ்நகரில் 249 பேர், சிக்பள்ளாப்பூரில் 471 பேர், சிக்கமகளூருவில் 229 பேர், சித்ரதுர்காவில் 133 பேர், தட்சிண கன்னடாவில் 485 பேர், தாவணகெரேயில் 200 பேர், தார்வாரில் 472 பேர், கதக்கில் 74 பேர், ஹாசனில் 248 பேர், ஹாவேரியில் 74 பேர், கலபுரகியில் 642 பேர், குடகில் 295 பேர், கோலாரில் 504 பேர், கொப்பலில் 84 பேர், மண்டியாவில் 519 பேர், மைசூருவில் 645 பேர், ராய்ச்சூரில் 428 பேர், ராமநகரில் 206 பேர், சிவமொக்காவில் 225 பேர், துமகூருவில் 1,004 பேர், உடுப்பியில் 282 பேர், உத்தரகன்னடாவில் 181 பேர், விஜயாப்புராவில் 429 பேர், யாதகிரியில் 114 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    கொரோனாவுக்கு பெங்களூரு நகரில் 124 பேரும், ஹாசனில் 8 பேரும், கலபுரகியில் 7 பேரும், பல்லாரியில் 6 பேரும், தார்வார், கோலார், துமகூருவில் தலா 5 பேரும், பெங்களூரு புறநகர், ஹாவேரி, மண்டியா, மைசூருவில் தலா 4 பேரும்பெலகாவி, சாம்ராஜ்நகர், சிக்பள்ளாப்பூர், பீதர், விஜயாப்புராவில் 2 பேரும், ராமநகர், சிவமொக்கா, யாதகிரியில் தலா ஒருவர் என மொத்தம் 190 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

    இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. தலைநகர் பெங்களூருவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் கொரோனாவுக்கு 124 பெர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பெங்களூருவில் கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் வேகமாக அதிகரித்து வருவதால் மக்கள் பீதியடைந்து உள்ளனர். இதனால் இங்கு வசிக்கும் வெளிமாவட்டங்களை சேர்ந்த மக்கள் பெங்களூருவை காலி செய்துவிட்டு சொந்த ஊரை நோக்கி புறப்பட்டு செல்கிறார்கள்.

    Next Story
    ×