search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீ விபத்து ஏற்பட்ட மருத்துவமனை
    X
    தீ விபத்து ஏற்பட்ட மருத்துவமனை

    மகாராஷ்டிரா மருத்துவமனை தீ விபத்து - பலி எண்ணிக்கை 15 ஆக அதிகரிப்பு

    மகாராஷ்டிராவில் கொரோனா சிகிச்சைக்கான மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக அர்னாலா காவல் நிலையத்தில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டு உள்ளது.
    மும்பை:

    இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளது. அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த அரசும் தீவிர முயற்சி எடுத்து வருகிறது.  தடுப்பூசி பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டம் வசாய் நகரில் விரார் என்ற இடத்தில் உள்ள விஜய் வல்லப என்ற கொரோனா சிகிச்சை மருத்துவமனையில் நேற்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்டதும் உடனடியாக அங்கிருந்த நோயாளிகள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.  

    கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டு இருந்த நோயாளிகளில் 12 பேர் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகின.

    தீ விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி, ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    மீட்புப் பணியில் இணைந்த போலீசார்

    இந்நிலையில், கொரோனா சிகிச்சை மருத்துவமனை தீ விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. வசாய்-விரார் மாநகராட்சியின் சுகாதாரத் துறையைச் சேர்ந்த டாக்டர் கிஷோர் கவாஸ் இதனை தெரிவித்துள்ளார்.

    தீ விபத்து தொடர்பாக மருத்துவமனையின் பணியாளர்கள், நிர்வாகம் மற்றும் மருத்துவர் ஒருவர் மீது ஐ.பி.சி.யின் பல்வேறு பிரிவுகளின் கீழ் அர்னாலா காவல் நிலையத்தில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது என காவல்துறை துணை ஆணையாளர் சஞ்சய் பாட்டீல் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×