search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஆந்திரா, மேற்கு வங்காளம், கேரள மாநில கொரோனா அப்டேட்ஸ்...

    மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று புதிதாக 6,91,851 பேரும், கேரளாவில் 28,447 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 66,836 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 74,045 பேர் குணமடைந்த நிலையில், 773 பேர் உயிரிழந்துள்ளனர். 6,91,851 பேர் தற்போது வரை சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை 41,61,676 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 34,04,792 பேர் குணமடைந்துள்ளனர். 63,252 பேர் உயிரிழந்துள்ளனர்.

    மேற்கு வங்காளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 12,876 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6,878 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், 59 பேர் உயிரிழந்துள்ளனர். 74,737 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இதுவரை 7,13,780 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    ஆந்திர பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11,766 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4441 பேர் குணமடைந்துள்ள நிலையில், 38 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 10,09,228 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 9,27,418 பேர் குணமடைந்துள்ளனர். 7579 பேர் உயிரிழந்துள்ளனர். 74,231 பேர் தற்போது வரை சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    கோப்புப்படம்

    ராஜஸ்தானில் 15,398 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5197 பேர் குணமடைந்துள்ள நிலையில், 64 பேர் உயிரிழந்துள்ளனர். 1,17,294 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 3,62,526 பேர் குணமடைந்துள்ளனர். 3,453 பேர் உயிரிழந்துள்ளனர்.

    கேரளாவில் 28,447 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 5663 பேர் குணமடைந்துள்ள நிலையில், 27 பேர் உயிரிழந்துள்ளனர். 1,78,983 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 11,66,135 பேர் குணமடைந்துள்ளனர்.
    Next Story
    ×