search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீரத் சிங் ராவத்
    X
    தீரத் சிங் ராவத்

    உத்தரகாண்டில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி - முதல்வர் தீரத் சிங் ராவத் தகவல்

    உத்தரகாண்ட் மாநிலத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என அந்த மாநிலத்தின் முதல்வர் தீரத் சிங் ராவத் அறிவித்துள்ளார்.
    டேராடூன்:

    இந்தியாவில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதற்கிடையே கொரோனா நோய் பரவலின் தீவிரத்தை உணர்ந்து 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும்மே 1-ந்தேதி முதல் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று மத்திய அரசு சமீபத்தில் அனுமதி வழங்கியது. அத்துடன் தடுப்பூசி உற்பத்தியாளர்களிடம் இருந்து மாநில அரசுகள் மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகள் நேரடியாக தடுப்பூசி வாங்கிக்கொள்ளவும் மத்திய அரசு அனுமதித்து உள்ளது.

    இதற்கிடையில் சீரம் இந்தியா நிறுவனம் தனது கோவிஷீல்டு தடுப்பூசிக்கு விலை நிர்ணயம் செய்துள்ளது. மாநில அரசுகளுக்கு ஒரு டோஸ் ரூ.400 மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு ஒரு டோஸ் ரூ.600 என விற்பனை செய்யப்படும் என்று சீரம் இந்தியா அறிவித்தது.

    அந்த நிறுவனம் உற்பத்தி செய்யும் மொத்த தடுப்பூசியில் 50 சதவீதம், இந்தியாவின் தடுப்பூசி திட்டத்திற்கு வழங்கப்படும்.  மீதமுள்ள 50 சதவீதம் மாநில அரசுகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என அந்த மாநிலத்தின் முதல்வர் தீரத் சிங் ராவத் அறிவித்துள்ளார்.

    Next Story
    ×