search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரெயிலில் அனுப்பப்பட்ட ஆக்சிஜன்
    X
    ரெயிலில் அனுப்பப்பட்ட ஆக்சிஜன்

    ஆந்திரா, ஜார்க்கண்டில் இருந்து மகாராஷ்டிரா, உத்தரபிரதேசத்துக்கு 2 ரெயில்களில் ஆக்சிஜன்

    மகாராஷ்டிர மாநிலத்துக்கு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து ரெயிலில் ஆக்சிஜன் அனுப்பப்படுகிறது.
    புதுடெல்லி:

    மகாராஷ்டிரா, டெல்லி, மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம், சண்டிகர் போன்ற மாநிலங்களில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் மிக அதிகமாகி வருகிறது.

    அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் படுக்கைகள் நிரம்பி வருகின்றன. நோயினால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானவர்களுக்கு ஆக்சிஜன் செலுத்தி சிகிச்சை அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் மும்பை, டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை கடுமையாக உள்ளது.

    ஆக்சிஜன் சிலிண்டர்கள்

    இதனால் ஏராளமானோர் உயிரிழந்து வருகிறார்கள். இதனை தடுக்க பற்றாக்குறை உள்ள இடங்களுக்கு மத்திய அரசு உடனடியாக ஆக்சிஜனை அனுப்பி வருகிறது.

    அந்த வகையில் மகாராஷ்டிர மாநிலத்துக்கு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து ரெயிலில் ஆக்சிஜன் அனுப்பப்படுகிறது. ஆக்சிஜன் டேங்கருடன் கூடிய லாரிகளை விசே‌ஷ சரக்கு ரெயிலில் நேரடியாக ஏற்றி அதன் மூலம் கொண்டு செல்கிறார்கள்.

    இதேபோல ஜார்க்கண்ட் மாநிலம் போகோராவில் இருந்தும் ஒரு ரெயில் புறப்படுகிறது. அந்த ரெயிலில் வரும் ஆக்சிஜன் உத்தரபிரதேச மாநிலத்துக்கு சப்ளை செய்யப்படுகிறது.

    இதற்காக லக்னோவில் இருந்து டேங்கர் லாரிகளுடன் விசே‌ஷ ரெயிலை பகோராவுக்கு அனுப்பி வைத்துள்ளனர். அவை ஆக்சிஜனை ஏற்றிக்கொண்டு வாரணாசி வழியாக உத்தரபிரதேசத்துக்கு வருகிறது. பின்னர் அவை பல்வேறு இடங்களுக்கு பிரித்து அனுப்பப்படுகிறது.

    ஆக்சிஜன் டேங்கர் லாரிகளை சாலை வழியாக அனுப்பி வைத்தால் தாமதம் ஆகும் என்பதற்காக ரெயிலில் அனுப்புகின்றனர். இந்த ரெயில்கள் 62 கி.மீ. வேகத்தில் பயணம் செய்து குறிப்பிட்ட இலக்குகளை அடையும்.


    Next Story
    ×