search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓட்டு போட வரிசையில் நிற்கும் வாக்காளர்கள்
    X
    ஓட்டு போட வரிசையில் நிற்கும் வாக்காளர்கள்

    மேற்கு வங்காள தேர்தல் -5 மணி நிலவரப்படி 70.42 சதவீத வாக்குப்பதிவு

    மேற்கு வங்காளத்தில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி இன்று 6ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளத்தில் இன்று 6-வது கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மாநிலத்தின் வடக்கு 24 பர்கானாக்கள், நாடியா, கிழக்கு பர்தமான், உத்தர் தினாஜ்பூர் ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த 43 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மொத்தம் 14,480 வாக்குச்சாவமடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. 306 வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் இந்த தேர்தலில் வாக்காளர்கள் ஆர்வமாக வாக்களிக்கின்றனர்.

    காலை 9.30 மணி நிலவரப்படி 17 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. 11.30 மணி நிலவரப்படி 37.27 சதவீத வாக்குகளும், 1 மணி நிலவரப்படி 57.30 சதவீத வாக்குகளும் பதிவாகியிருந்தன. பிற்பகலிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. 



    இந்நிலையில், மாலை 5 மணி நிலவரப்படி, 70.42 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. அதிகபட்சமாக நாடியா மாவட்டத்தில் 74 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. உத்தர் தினாஜ்பூர் மாவட்டத்தில் 72.10 சதவீதம், வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் 65.13 சதவீதம், கிழக்கு பர்தமானில் 75.20 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைகிறது.

    வாக்காளருக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை

    இதுவரை இல்லாத அளவிற்கு தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழ்நிலையில், 6ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனால் வாக்குச்சாவடிகளில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பொதுமக்கள் பின்பற்றும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

    வாக்குச்சாவடிகளுக்கு வரும் வாக்காளர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்படுகிறது, கைகளை சுத்தம் செய்ய சானிடைசர் வழங்கப்பட்டது.

    Next Story
    ×