search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    மகாராஷ்டிரா, குஜராத், கேரளா, கர்நாடகா, ஆந்திர மாநில கொரோனா அப்டேட்ஸ்....

    மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று புதிதாக 67,468 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கேரளாவில் 22,414 ஆக உயர்ந்துள்ளது.
    மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று புதிதாக 67,468 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 568 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 6,95,747 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 54,985 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 40,27,827 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    குஜராத் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 12,553 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 4,802 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், 125 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 4,40,731 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,50,865 பேர் குணமடைந்துள்ளனர். 5,740 பேர் உயிரிழந்துள்ளனர். 84,126 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    கேரளாவில் புதிதாக 22,414 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5431 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

    கோப்புப்படம்

    கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 23,558 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6412 பேர் குணமடைந்துள்ளனர். 116 பேர் உயிரிழந்துள்ளனர். 12,22,202 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1,76,188 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,716 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,359 பேர் குணமடைய 38 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 9,86,703 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 7,510 பேர் உயிரிழந்துள்ளனர். 9,18,985 பேர் குணமடைந்த நிலையில், 60,208 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
    Next Story
    ×