search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தடுப்பூசி முகாமில் குவிந்த பொதுமக்கள்
    X
    தடுப்பூசி முகாமில் குவிந்த பொதுமக்கள்

    கேரளாவில் தடுப்பூசி முகாமில் குவிந்த பொதுமக்கள் - டோக்கன் விநியோகத்தின் போது தள்ளுமுள்ளு

    கேரளாவில் கோட்டயம் மாநிலத்தில் உள்ள பேக்கர் நினைவு பள்ளியில், நடைபெற்று வரும் மாபெரும் தடுப்பூசி முகாமில், அதிகாலை 6 மணியில் இருந்தே நூற்றுக்கணக்கானவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள கூடினர்.
    கோட்டயம்:

    கேரள மாநிலத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், தடுப்பூசி போட்டுக்கொள்ள முகாம்களுக்கு செல்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. 

    இதன் ஒரு பகுதியாக, கோட்டயம் மாநிலத்தில் உள்ள பேக்கர் நினைவு பள்ளியில், நடைபெற்று வரும் மாபெரும் தடுப்பூசி முகாமில், அதிகாலை 6 மணியில் இருந்தே நூற்றுக்கணக்கானவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள கூடினர். மாநிலத்தில் நிலவும் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக இந்த முகாமில் தினந்தோறும் ஆயிரம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படுகிறது. இதனை ஒருங்கிணைக்கும் வகையில் டோக்கன் வழங்கப்படுகிறது. 

    இந்நிலையில், சுகாதாரத் துறையினரால் முகாமில் வரிசையில் காத்திருந்தவர்களுக்கு டோக்கன் வழங்கிய போது, வரிசையில் நிற்காதவர்களும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் முண்டியடித்து சென்றனர். இதனால், காவல்துறையினருக்கும், பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

    Next Story
    ×