search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    இடுக்கி காட்டுக்குள் மாயமான கல்லூரி மாணவர், நண்பருடன் தற்கொலை

    கேரள மாநிலம் இடுக்கியில் உள்ள அடர்ந்த காட்டுக்குள் மாயமான கல்லூரி மாணவர், நண்பருடன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் இடுக்கியில் உள்ள அடர்ந்த காட்டுக்குள் 2 வாலிபர்கள் பிணமாக கிடந்தனர்.

    இது பற்றி மலை கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இடுக்கி வனச்சரக அதிகாரி ஜோஜி ஜேக்கப் மற்றும் ஊழியர்கள் காட்டுக்குள் சென்றனர். அங்கு ஒரு மரத்தில் வாலிபர்கள் இருவரும் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தனர்.

    வன ஊழியர்கள் இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அடிமாலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் காட்டுக்குள் பிணமாக கிடந்தது மருட்டிமூட்டில் பகுதியை சேர்ந்த விவேக் (வயது 21), மூன்னுகண்டத்தில் சிவகங்கா (19) என தெரியவந்தது.

    இதில் விவேக் அடிமாலியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். சிவகங்கா, இரிஞாலக்குடாவில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    விவேக், சிவகங்கா இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆவர். இவர்கள் இருவரும் கடந்த 13-ந் தேதி வீட்டைவிட்டு வெளியே சென்றவர்கள் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதனால் இருவரின் பெற்றோரும் அவர்களை தேடி வந்தனர்.

    இது தொடர்பாக போலீசில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனர். இதில் இருவரும் சென்ற மோட்டார் சைக்கிள் கடந்த 15-ந் தேதி பால்குளமேடு பகுதியில் அனாதையாக கிடந்தது.

    இதையடுத்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர். இந்த நிலையில் தான் இருவரும் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்த விபரம் வனத்துறையினர் மூலம் போலீசாருக்கு தெரியவந்தது. விவேக், சிவகங்கா இருவரும் தற்கொலை செய்தது ஏன்? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×