search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    மேற்குவங்காளத்தில் 43 தொகுதிகளுக்கு நாளை 6-ம் கட்ட தேர்தல்

    மேற்குவங்காளத்தில் 43 தொகுதிகளுக்கான தேர்தல் பிரசாரம் நேற்று முன்தினம் மாலையுடன் ஓய்ந்தது. நாளை காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி இரவு 7 மணிவரை நடக்கிறது.

    கொல்கத்தா:

    மேற்குவங்காள சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இங்கு மொத்தம் 294 தொகுதிகள் உள்ளன.

    முதல்கட்ட தேர்தல் கடந்த மாதம் 27-ந்தேதி நடந்தது. கடந்த 1-ந்தேதி 2-வது கட்ட தேர்தலும், 6-ந்தேதி 3-வது கட்ட தேர்தலும், 10-ந்தேதி 4-வது கட்ட தேர்தலும் நடந்தது. 5-வது கட்டமாக 45 தொகுதிகளுக்கு கடந்த 17-ந்தேதி தேர்தல் நடைபெற்றது.

    இதுவரை 180 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்துள்ளது. இன்னும் 114 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற வேண்டும்.

    இந்தநிலையில் மேற்கு வங்காளத்தில் நாளை (22-ந் தேதி) 43 தொகுதிகளுக்கு 6-வது கட்டதேர்தல் நடக்கிறது. இந்த தொகுதிகளுக்கான தேர்தல் பிரசாரம் நேற்று முன்தினம் மாலையுடன் ஓய்ந்தது. நாளை காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி இரவு 7 மணிவரை நடக்கிறது.

    முக கவசம்

    கொரோனா பரவல் காரணமாக வாக்காளர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து வருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளியை பின்பற்றி வாக்காளர்கள் ஓட்டு போடுகிறார்கள்.

    நாளை ஓட்டுப்பதிவு முடிந்ததும் இன்னும் 2 கட்டமாக 71 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற வேண்டும். வருகிற 26-ந்தேதி 7-வது கட்டமாக 36 தொகுதிகளுக்கும், வருகிற 29-ந்தேதி 8-வது கட்டமாக 35 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

    8 கட்ட தேர்தல் முடிவடைந்ததும் மே மாதம் 2-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும்.

    Next Story
    ×