search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை
    X
    கொரோனா பரிசோதனை

    கர்நாடகத்தில் புதிய உச்சமாக ஒரே நாளில் 21,794 பேருக்கு கொரோனா

    கர்நாடகத்தில் புதிய உச்சமாக 21 ஆயிரத்து 794 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர். பெங்களூருவில் மட்டும் 13 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 149 பேர் இறந்து உள்ளனர்.
    பெங்களூரு

    கர்நாடகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    மாநிலத்தில் நேற்று ஒரு லட்சத்து 47 ஆயிரத்த 488 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் புதிதாக 21 ஆயிரத்து 794 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதன்மூலம் கொரோனாவுக்கு பாதித்தோர் எண்ணிக்கை 11 லட்சத்து 98 ஆயிரத்து 644 ஆக உயர்ந்து உள்ளது.

    பெங்களூரு நகரில் 13 ஆயிரத்து 782 பேர், பாகல்கோட்டையில் 125 பேர், பல்லாரியில் 406 பேர், பெலகாவியில் 186 பேர், பெங்களூரு புறநகரில் 513 பேர், பீதரில் 151 பேர், சாம்ராஜ்நகரில் 99 பேர், சிக்பள்ளாப்பூரில் 217 பேர், சிக்மகளூருவில் 115 பேர், சித்ரதுர்காவில் 121 பேர், தட்சிண கன்னடாவில் 482 பேர், தாவணகெரேயில் 136 பேர், தார்வாரில் 288 பேர், கதக்கில் 73 பேர், ஹாசனில் 410 பேர், ஹாவேரியில் 37 பேர், கலபுரகியில் 818 பேர், குடகில் 65 பேர், கோலாரில் 284 பேர், கொப்பலில் 103 பேர், மண்டியாவில் 413 பேர், மைசூருவில் 699 பேர், ராய்ச்சூரில் 243 பேர், ராமநகரில் 114 பேர், சிவமொக்காவில் 202 பேர், துமகூருவில் 1,055 பேர், உடுப்பியில் 109 பேர், உத்தர கன்னடாவில் 106 பேர், விஜயாப்புராவில் 358 பேர், யாதகிரியில் 84 பேர் புதிதாக கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    உயிரிழந்தவர்களின் உடல்களுடன் அணிவகுத்து நிற்கும் ஆம்புலன்ஸ்களை படத்தில் காணலாம்.

    பெங்களூரு நகரில் 92 பேர், பெங்களூரு புறநகரில் 5 பேர், பீதர், கலபுரகியில் தலா 7 பேர், தார்வார், மைசூரு, துமகூருவில் தலா 4 பேர், சாம்ராஜ்நகர், சிக்பள்ளாப்பூர், சிக்கமகளூரு, குடகு, கோலார், ராய்ச்சூர், ராமநகர், உடுப்பி, யாதகிரியில் தலா ஒருவர், மண்டியா, சிவமொக்காவில் தலா 2 பேர் என 149 பேர் இறந்தனர். இதனால் சாவு எண்ணிக்கை 13 ஆயிரத்து 646 ஆக அதிகரித்து உள்ளது. 11 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை.

    புதிதாக 4,571 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதனால் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 10 லட்சத்து 25 ஆயிரத்து 821 ஆக உயர்ந்து உள்ளது. ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 158 பேர் சிகிச்சையில் உள்ளனர். 751 பேர் தீவிர சிகிசசை பிரிவில அனுமதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று 72 லட்சத்து 98 ஆயிரத்து 514 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.

    இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

    கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரித்து உள்ளது. நேற்று புதிய உச்சமாக 21 ஆயிரத்து 794 பேர் பாதிப்புக்கு உள்ளானதும், 149 பேர் இறந்ததும் மாநில அரசையும், சுகாதாரத்துறையையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
    Next Story
    ×