search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    மேற்கு வங்காளத்தில் ரெயில் டிரைவர்கள் 90 பேருக்கு கொரோனா

    மேற்கு வங்காளத்தில் ரெயில் டிரைவர்கள் 90 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அந்த பகுதியில் இயக்கப்பட்ட 56 மின்சார ரெயில் சேவைகள் நேற்று முதல் ரத்து செய்யப்பட்டன.
    கொல்கத்தா:

    கிழக்கு ரெயில்வே மண்டலத்தில் ரெயில் என்ஜின் டிரைவர்கள், கார்டுகளுக்கு கொரோனா பரிசோதனை செய்தது. அப்போது மேற்கு வங்காளத்தின் சியல்டா பிரிவு ரெயில்வேயில் 90 டிரைவர்கள், கார்டுகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த பகுதியில் இயக்கப்பட்ட 56 மின்சார ரெயில் சேவைகள் நேற்று முதல் ரத்து செய்யப்பட்டன.

    மேற்கு வங்காளத்தில் புறநகர் ரெயில்சேவை ஊரடங்கிற்குப் பிறகு நவம்பர் 11 முதல்தான் செயல்பட ஆரம்பித்தன, தற்போது 7 மாத இடைவெளியில் மீண்டும் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×