search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    இந்தியாவில் போடப்பட்டு உள்ள மொத்த தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 12.38 கோடி

    இந்தியாவில் கடந்த ஜனவரி 16-ந் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. பல்வேறு வகையான பயனாளர்களை அடையாளம் கண்டறிந்து இந்த தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் கடந்த ஜனவரி 16-ந் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. பல்வேறு வகையான பயனாளர்களை அடையாளம் கண்டறிந்து இந்த தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

    இந்தியாவில் அதிவேகத்தில் தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில், தற்போது 2-வது அலை நாட்டில் வேகமெடுத்துள்ளதால் தடுப்பூசி போடும் பணிகளின் வேகத்தை மத்திய-மாநில அரசுகள் மேலும் அதிகரித்து இருக்கின்றன.

    இதன் மூலம் நாள்தோறும் லட்சக்கணக்கான பயனாளர்கள் தடுப்பூசி போட்டு வருகின்றனர். அந்தவகையில் நேற்று முன்தினம் மட்டும் 12 லட்சத்துக்கு மேற்பட்ட தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டு உள்ளன.

    அதாவது 12 லட்சத்து 30 ஆயிரத்து 7 டோஸ் தடுப்பூசி வெறும் 24 மணி நேரத்தில் போடப்பட்டு இருக்கிறது. விடுமுறை தினமாக இருந்தபோதும் இவ்வளவு அதிக டோஸ்கள் போடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    இதில் 9 லட்சத்து 40 ஆயிரத்து 725 பயனாளர்கள் முதல் டோசும், 2 லட்சத்து 89 ஆயிரத்து 282 பயனாளர்கள் 2-வது டோசும் போட்டுக்கொண்டுள்ளனர்.

    இந்த 12.30 லட்சம் டோஸ்களையும் சேர்த்து, இந்தியாவில் போடப்பட்ட மொத்த தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 12.38 கோடியாக அதிகரித்து இருக்கிறது.

    இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டு உள்ளது.
    Next Story
    ×