search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராகுல் காந்தி
    X
    ராகுல் காந்தி

    கொரோனா பரவல் அதிகரிப்பு- ராகுல் காந்தியின் மேற்குவங்காள தேர்தல் பிரசாரம் ரத்து

    கொரோனாவின் 2-வது அலை பாதிப்பு அதிகரித்து வருவதால், அவர் மேற்கு வங்காளத்தில் பிரசாரம் செய்வதை ரத்து செய்துள்ளார்.

    புதுடெல்லி:

    294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்காள மாநிலத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதுவரை 180 தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக தேர்தல் முடிந்துவிட்டது.

    6-வது கட்டமாக 22-ந் தேதியும், 7-வது கட்டமாக 26-ந் தேதியும், கடைசி கட்டமாக 29-ந் தேதியும் வாக்குப்பதிவு நடக்கிறது.

    இந்த நிலையில் மேற்கு வங்காள மாநிலத்தில் எஞ்சிய கட்டங்களில் தேர்தல் பிரசாரம் செய்வதாக இருந்த காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தனது பொதுக் கூட்டங்களை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.

    கொரோனாவின் 2-வது அலை பாதிப்பு அதிகரித்து வருவதால், அவர் மேற்கு வங்காளத்தில் பிரசாரம் செய்வதை ரத்து செய்துள்ளார்.

    மேற்கு வங்காளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 6,910 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    கொரோனா பாதிப்பு மற்றும் மருத்துவமனைகளில் படுக்கை வசதி குறித்து கண்காணிப்பதற்காக அந்த மாநிலத்தில் சுகாதாரத் துறை செயலாளர் தலைமையில் 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×