search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேர்வு எழுதும் மாணவர்கள் (கோப்பு படம்)
    X
    தேர்வு எழுதும் மாணவர்கள் (கோப்பு படம்)

    தொடர்ந்து அச்சுறுத்தும் கொரோனா... ஜேஇஇ நுழைவுத்தேர்வு ஒத்திவைப்பு

    ஜேஇஇ நுழைவுத்தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தேசிய தேர்வு முகமை கூறி உள்ளது.
    புதுடெல்லி:

    நாட்டில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் மாணவர்களின் நலன் கருதி பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சில தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

    அவ்வகையில் பொறியியல் படிப்புக்கான ஜேஇஇ நுழைவுத்தேர்வும் (மெயின் தேர்வு) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வரும் 27, 28, 29 ஆகிய தேதிகளில் தேர்வு நடைபெறவிருந்த நிலையில், தற்போதையை சூழ்நிலையை கருத்தில் கொண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

    தடுப்பூசி போடும் பணி

    தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தேசிய தேர்வு முகமை கூறி உள்ளது. தேர்வுக்கு 15 நாட்களுக்கு முன்னர் தேதி அறிவிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.

    இந்தியாவில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை அடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு 2 லட்சத்தை தாண்டி பதிவாகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2.61 லட்சம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×