search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி
    X
    கொரோனா தடுப்பூசி

    நாடு முழுவதும் போடப்பட்டுள்ள தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 12 கோடியை நெருங்கியது

    நாடு முழுவதும் தற்போது தொற்று வேகமாக பரவி வருவதால் தடுப்பூசி போடும் பணிகளை மத்திய-மாநில அரசுகள் மேலும் தீவிரப்படுத்தி வருகின்றன.
    புதுடெல்லி:

    கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போடும் பணிகள் இந்தியாவில் மிகவும் வேகமாக நடந்து வருகிறது. நாடு முழுவதும் தற்போது தொற்று வேகமாக பரவி வருவதால் இந்த பணிகளை மத்திய-மாநில அரசுகள் மேலும் தீவிரப்படுத்தி வருகின்றன.

    இதன் பலனாக இந்தியா முழுவதும் போடப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 12 கோடியை நெருங்கி விட்டது. நேற்று காலை 7 மணி நிலவரப்படி 11 கோடியே 99 லட்சத்து 37 ஆயிரத்து 641 டோஸ்கள் போடப்பட்டு இருந்தன.

    கொரோனா பரிசோதனை


    குறிப்பாக நேற்று காலை வரையிலான முந்தைய 24 மணி நேரத்தில் மட்டுமே 30 லட்சத்துக்கும் அதிகமான டோஸ்கள் போடப்பட்டு உள்ளன. இதில் 22,96,008 பயனாளிகள் முதல் டோசும், 7,08,536 பயனாளிகள் 2-வது டோசும் போட்டுள்ளனர். இந்தியாவில் இதுவரை போடப்பட்ட தடுப்பூசி ேடாஸ்களின் எண்ணிக்கையில் சுமார் 60 சதவீத டோஸ்கள் வெறும் 8 மாநிலங்களில் மட்டுமே போடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×