search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாக்காளர்கள்
    X
    வாக்காளர்கள்

    அமைதியாக முடிந்தது ஐந்தாம் கட்ட தேர்தல்- மேற்கு வங்காளத்தில் அதிக அளவில் வாக்களித்த பெண்கள்

    மேற்கு வங்காளத்தில் இன்று நடைபெற்ற 5ம் கட்ட தேர்தலில் 78.46 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
    கொல்கத்தா:

    294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்காள சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. ஏற்கனவே 135 தொகுதிகளுக்கு 4 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றுள்ளது. 5-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று கொரோனா கட்டுப்பாடுகளுடன் நடைபெற்றது.

    டார்ஜிலிங், நாடியா, கலிம்போங், கிழக்கு பர்தமான் ஜல்பாய்குரி மற்றும் வடக்கு 24 பா்கானாக்கள் ஆகிய 6 மாவட்டங்களுக்கு உட்பட்ட 45 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 39 பெண்கள் உள்பட 319 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

    வாக்களிக்க வரிசையில் நிற்கும் வாக்காளர்கள்

    மொத்தம் 15,789 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

    வாக்காளர்கள் காலை முதலே ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு வந்து தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். இதனால் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக இருந்தது. 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது. அப்போது வரிசையில் வாக்காளர்கள் காத்திருந்தால், கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டு அனைவருக்கும் வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டது. 

    இந்த தேர்தலில்  78.46 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. ஜல்பாய்குரியில் அதிகபட்சமாக 81.71 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. கிழக்கு பர்தமான் மாவட்டத்தில் 81.67 சதவீதம், நாடியாவில் 81.74 சதவீதம், டார்ஜிலிங்கில் 74.60 சதவீதம், கலிம்போங்கில் 72.47 சதவீதம், வடக்கு 24 பா்கானாசில் 75.14 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.

    அனைத்து வாக்குச்சாவடிகளிலும் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்ததாகவும், பெண்கள் அதிக அளவில் வாக்களித்திருப்பதாகவும் தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.
    Next Story
    ×