search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    மகாராஷ்டிரா 63,729: உ.பி. 27,426- ம.பி., டெல்லி, மேற்கு வங்காள மாநிலங்களின் கொரோனா பாதிப்பு அப்டேட்ஸ்

    மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 63,729 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உத்தர பிரதேச மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு 27,426 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு புதிதாக 63,729 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 45,335 பேர் குணமடைந்த நிலையில், 398 பேர் உயிரிழந்துள்ளனர். அம்மாநிலத்தில் 37,03,584 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 30,04,391 பேர் குணமடைந்துள்ளனர். 59,551 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 6,38,034 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    டெல்லியில் 19,486 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 141 பேர் உயிரிழக்க 12649 பேர் கடந்த 24 மணி நேரத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

    மேற்கு வங்காளத்தில் 6910 பேர் கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். 26 பேர் உயிரிழக்க, 2818 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

    உத்தர பிரதேசத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு 27,426 பேர் கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். 103 பேர் உயிரிழக்க 6429 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

    கோப்புப்படம்

    பஞ்சாப் மாநிலத்தில் 3,915 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3,129 பேர் குணமடைந்துள்ளனர. 51 பேர் உயிரிழந்துள்ளனர்.

    மத்திய பிரதேச மாநிலத்தில் 11,045 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 7,496 பேர் குணமடைந்துள்ளனர். 60 பேர் உயிரிழந்துள்ளனர்.
    Next Story
    ×