search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமித்ஷா, ஜேபி நட்டா
    X
    அமித்ஷா, ஜேபி நட்டா

    மேற்கு வங்காளத்தில் அமித்ஷா, ஜேபி நட்டா ஒரே நேரத்தில் பிரசாரம்

    கொரோனா காலம் என்பதால் பிரசாரத்திற்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால் கட்டுப்பாட்டையும் மீறி ஒவ்வொரு கட்சி நிகழ்ச்சிகளிலும் தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காளத்தில் 8 கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் ஏற்கனவே 4 கட்ட தேர்தல்கள் முடிந்துள்ளன. நாளை 5-வது கட்ட தேர்தல் நடக்கிறது. மேலும் 3 கட்ட தேர்தல்கள் மீதம் உள்ளன.

    அந்த பகுதிகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.

    பாரதீய ஜனதாவுக்கு ஆதரவு திரட்ட ஏற்கனவே பிரதமர் நரேந்திரமோடி தொடர்ந்து பிரசாரம் மேற் கொண்டார். அவர் மேலும் பிரசாரம் செய்ய இருக்கிறார்.

    இந்த நிலையில் உள்துறை மந்திரி அமித்ஷா, கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் இன்று ஒரே நேரத்தில் பிரசாரம் மேற்கொண்டனர். அமித்ஷா இன்று தெற்கு வங்காளம் பகுதியில் 2 பொதுக்கூட்டம், 2 ரோடு ஷோ ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

    அதேபோல ஜே.பி.நட்டா 3 பொதுக்கூட்டம், 2 ரோடு ஷோ நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதே நேரத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அவர் இன்று 4 பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசினார். தலைவர்களின் பிரசாரத்தையொட்டி அனைத்து பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    இதேபோல பாரதீய ஜனதா மத்திய மந்திரிகள், பல்வேறு மாநிலத்தலைவர்கள் மேற்கு வங்காளத்தில் முகாமிட்டு பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.

    கொரோனா காலம் என்பதால் பிரசாரத்திற்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால் கட்டுப்பாட்டையும் மீறி ஒவ்வொரு கட்சி நிகழ்ச்சிகளிலும் தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    இதனால் கொரோனா பாதிப்பு அதிகமாகி விடலாம் என்ற அச்சம் நிலவுகிறது. மேற்கு வங்காளத்தில் நேற்று மட்டுமே 6 ஆயிரத்து 769 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×