search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உ.பி. துணை முதல்வர் தினேஷ் சர்மா
    X
    உ.பி. துணை முதல்வர் தினேஷ் சர்மா

    உத்தர பிரதேசத்தில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தள்ளிவைப்பு

    உத்தரபிரதேசத்தில் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு அனைத்து பள்ளிகளும் மே 15ம் தேதிவரை தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    லக்னோ:

    உத்தர பிரதேசத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு அரசுத்துறை அதிகாரிகளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், கொரோனா பரவலை கருத்தில் கொண்டு அனைத்து பள்ளிகளும் மே 15ம் தேதிவரை தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என அரசு அறிவித்தது. மேலும், 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள்  மே 20ம் தேதி வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளன. 

    கொரோனா பரிசோதனை

    இதுபற்றி துணை முதல்வர் தினேஷ் ஷர்மா கூறுகையில், ‘மே முதல் வாரத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளோம். அப்போது, பொதுத்தேர்வுகளை நிறுத்தி வைப்பதா அல்லது பிற வழிகளை ஆராய வேண்டுமா? என்பதுபற்றி முடிவு செய்யப்படும். பல்கலைக்கழக தேர்வுகளும் மே 15ம் தேதி வரை தள்ளிவைக்கப்பட்டுள்ளன’ என்றார்.

    உத்தரபிரதேசத்தில் இதுரை 6.22  லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1.11 லட்சம் பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.
    Next Story
    ×