search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மம்தா பானர்ஜி
    X
    மம்தா பானர்ஜி

    மக்களை பாதுகாக்க மீதமுள்ள தேர்தல்களை ஒரேகட்டமாக நடத்துங்கள்: மம்தா பானர்ஜி வலியுறுத்தல்

    கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க 159 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தலை நடத்த வேண்டும் என மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.
    மேற்கு வங்காளத்தில் 135 தொகுதிகளுக்கு நான்கு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. மீதமுள்ள 159 தொகுதிகளுக்கு நாளை மறுதினம் முதல் ஏப்ரல் 29-ந்தேதி வரை நான்கு கட்டங்களாக நடைபெற இருக்கிறது.

    தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால் அப்படி ஒரு திட்டம் இல்லை என தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி டுவிட்டர் பக்கத்தில் ‘‘கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் பாதித்து கொண்டிருக்கும்போது, மேற்கு வங்காளத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்ததை நாங்கள் மொத்தமாக எதிர்த்தோம்.

    தேர்தல் ஆணையம்

    தற்போது, கொரோனா வைரஸ் தொற்று மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. மீதமுள்ள தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்த பரிசீலிக்க வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையத்திற்கு வலியுறுத்துகிறேன். இது கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்கும்’’ எனத் தெரிவித்துள்ளார்.

    மேற்கு வங்காளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 6,769 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    Next Story
    ×